குமுக ஆதரவு வேளாண்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சமுக ஆதரவு வேளாண்மை (Community-supported agriculture - CSA) என்பது உள்ளூர் வேளாண்மைக்கும் நுகர்வுக்கும் ஆதரவு தரும் ஒரு பொருளாதார மாதிரி ஆகும். பலர் இணைந்து உள்ளூர் விவசாயிகளின் உற்பத்திக்கு ஆதரவு தரும் ஏற்பாடே இதுவாகும். உணவு உற்பத்தியின் பலன்களையும் இடர்களையும் உற்பத்தியாளர்களும் நுகர்வோரும் பகிர்ந்துகொள்வார்கள். பொதுவாக, சமுக உறுப்பினர்கள் பருவக் காலம் தொடங்க முன் எதர்பார்க்கப்படும் உற்பத்தியின் ஒரு பங்கினை வாங்குவர். அறுவடைக் காலத்தில் அந்தப் பங்குக்கு ஏற்ப குறிப்பிட்ட கால இடைவெளியில் நுகர்வோருக்கு உணவு வழங்கப்படும். பொதுவாக மரக்கறி, பழங்கள், தானியங்கள், மூலிகைகள், சுவைப்பொடுகள், முட்டை, தேன், பால், பால்பொருட்கள், இறைச்சி போன்ற பொருட்கள் இவ்வாறு வழங்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமுக_ஆதரவு_வேளாண்மை&oldid=3004322" இருந்து மீள்விக்கப்பட்டது