குமாரதுங்க முனிதாச

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமாரதுங்க முனிதாச
කුමාරතුංග මුනිදාස
குமாரதுங்க முனிதாச
பிறப்பு(1887-07-25)சூலை 25, 1887
இலங்கை
இறப்புமார்ச்சு 3, 1944(1944-03-03) (அகவை 56)
பணிஎழுத்தாளர், புலவர், பத்திரிகையாளர்
பெற்றோர்அபயஸ் குமாரணதுங்க, பலவினாகே தோனா கிமாரா முத்துகுமாரண
வாழ்க்கைத்
துணை
லில்லி

குமாரதுங்க முனிதாச (Kumaratunga Munidasa, சிங்களம்: කුමාරතුංග මුනිදාස, 1887-1944) இலங்கையில் வாழ்ந்த மிகப் பிரபல சிங்கள மொழி மூலப் பேச்சாளரும், கவிஞரும், பத்திரிகையாளருமாவார்.

இவர், இலங்கையில் வாழ்ந்த மூத்த அறிஞர்களில் ஒருவர் எனக் கணி்ப்பிடப்படுகிறார். இவர் ஏனைய இலக்கியவாதிகளிலும் சிறந்து விளங்கக் காரணம் அவரிடம் இருந்த புதுமையான சிங்கள மொழியறிவும், புதுநோக்குமாகும். சிங்களம், பாளி, சமசுகிருதம் ஆகியவற்றில் முழு ஆளுமை மிகுந்தது மட்டுமன்றி, தமிழ், மலையாளம், ஆங்கிலம், இலத்தீன், கிரேக்க மொழிகளிலும் இவர் புலமை பெற்றிருந்தார்.

19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிரித்தானியரின் தலையீடு இலங்கையில் இருந்த காலகட்டத்தில், அவர்களிடமிருந்து சிங்கள மொழியைக் காப்பாற்றத் தன்னாலான முழுப் பங்களிப்பையும் நல்கினார். இவரது நன் நோக்கில் வழிவந்தவர்களே மககம சேக்கர, மடவளை எஸ். இரத்நாயக்க என்போர்.

இவரது பெயரிலேயே திக்குவல்லையில் உள்ள '”குமரதுங்கு முனிதஸ் மகா வித்தியாலயம்” என்னும் சிங்களப் பாடசாலை இயங்குகிறது. அதன் நிறுவுதலுக்கு இவர் பங்காற்றியதாகக் கருதப்படுகிறது. அப்பாடசாலையில் 3500 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். மாத்தறை மாநகரசபை நூலகமும் குமாரதுங்க முனிதாச நூலகம் என்றே பெயரிடப்பட்டுள்ளது.

எழுதிய நாவல்கள் ஹத்பன ஹீன்ஸெரய மகுல் கேம

புகழ்பெற்ற ஆக்கங்கள் கிரிய விவரணய குமார கீ குமாரோதய நெலவில்ல பிரிய சமர விரித் வெகிய வியாகரன விவரணய

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமாரதுங்க_முனிதாச&oldid=2466121" இருந்து மீள்விக்கப்பட்டது