குன்றத்தூர் திருநாகேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குன்றத்தூர் திருநாகேசுவரர் கோயில் அல்லது வடநாகேசுவரர் கோயில் தமிழ்நாடு, காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். சேக்கிழார் இக்கோவிலின் மூலவரைப் பிரதிட்டை செய்தார். இங்குள்ள விநாயகர் அனுக்ஞை விநாயகர்.

நாக தோஷ நிவர்த்தி, ராகுப்பெயர்ச்சியால் தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். கோயிலின் பிரகாரத்தில் சேக்கிழாருக்கு தனி சன்னிதி இருக்கிறது. கும்பகோணம் அருகில் உள்ள ராகு தலமான திருநாகேஸ்வரம் நாகேசுவரர் மீது மிகுந்த பற்று கொண்டு தினமும் அவரை வழிபட எண்ணி தான் பிறந்த ஊரிலே நாகேசுவரருக்கு கோவில் கட்டி வழிபடலானார்.

வெளி இணைப்புகள்[தொகு]