குத்தகைத் தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தனிப்பட்ட வலையமைப்பு (குத்தகைத் தொடர்களுடனான)

குத்தகைத் தொடர் (Leased Line) என்பது இணையத் தொடர்பைப் பெற்றுக் கொள்ளும் வழிமுறைகளுள் ஒன்றாகும்.[1] ஒரு தனிப்பட்ட வலையமைப்பினூடாக இரண்டு குறிப்பிட்ட இடங்களை இணைக்கும் மின்னணுவியற்சுற்றே குத்தகைத் தொடர் ஆகும்.

வசதியைப் பெறக் கூடிய நாடுகள்[தொகு]

இலங்கையில் சிறீலங்கா தெலிக்கொம் நிறுவனம் குத்தகைக் கொடுப்பனவு முறையின் மூலம் நொடிக்கு இரண்டு மெகாபிட்டுகள் வரையான கதியில் இணையத் தொடர்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது.[2] பிரித்தானியாவில் நொடிக்கு 34.368 மெகாபிட்டுகள் வரையான கதியில் இணையத் தொடர்பு வழங்கப்படுகின்றது. இந்தியாவில் நொடிக்கு 16 மெகாபிட்டுகள் வரையான கதியிலும் ஆங்கொங்கில் நொடிக்கு 512 கிலோபிட்டுகள் வரையான கதியிலும் குத்தகைக் கொடுப்பனவு முறை மூலம் இணைய வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும்.

நன்மைகள்[தொகு]

குத்தகைத் தொடரின் மூலம் இணையத்தைப் பெற்றுக் கொள்வது பாதுகாப்பான வழிமுறையாகும். ஒரு நாளின் 24 மணித்தியாலங்களும் இணையத்தைத் தொடர்ச்சியாகப் பெற்றுக் கொள்ளக்கூடியதாகவும் தகவலை அனுப்புவதிற்சிக்கல் இன்றியும் இருத்தல் இதன் சிறப்பம்சமாகும்.[3] பயன்படுத்தப்படும் மெகாபைற்றுகளின் அளவுக்கோ அல்லது பயன்படுத்தப்படும் நேரத்தின் அளவுக்கோ பணத்தைச் செலுத்த வேண்டிய தேவை இன்றி, ஒவ்வொரு திங்களும் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருப்பது அதிக நேரம் அல்லது அதிக அளவு இணையத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு நன்மையளிப்பது.

தீமைகள்[தொகு]

குத்தகைத் தொடரின் மூலம் இணையத்தைப் பெற்றுக் கொள்வதற்கான செலவு அதிகமானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. தகவல் தேடலுக்கான இணையப் பயன்பாடு[தொடர்பிழந்த இணைப்பு]
  2. ["சிறீலங்கா தெலிக்கொம் ஆண்டறிக்கை 2005 (ஆங்கில மொழியில்)". மூல முகவரியிலிருந்து 2011-01-23 அன்று பரணிடப்பட்டது. சிறீலங்கா தெலிக்கொம் ஆண்டறிக்கை 2005 (ஆங்கில மொழியில்)]
  3. ["குத்தகைத் தொடர்கள் பற்றி (ஆங்கில மொழியில்)". மூல முகவரியிலிருந்து 2011-12-05 அன்று பரணிடப்பட்டது. குத்தகைத் தொடர்கள் பற்றி (ஆங்கில மொழியில்)]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குத்தகைத்_தொடர்&oldid=3240678" இருந்து மீள்விக்கப்பட்டது