குதிரைப்படைப் பிரிவு, தமிழ்நாடு காவல்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை காவல்துறை குதிரைப்படை வீரர்கள்

குதிரைப்படைப் பிரிவு என்பது தமிழ்நாடு காவல்துறையில் உள்ள ஒரு காவல் பிரிவாகும். இப்பிரிவு தமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய மூன்று மாநகரங்களில் செயல்பட்டுவருகிறது.[1] இக்குதிரைப்படையானது சட்டம் ஒழுங்கு, ஊர்வலப் பாதுகாப்பு பணி, விழாக்கால பாதுகாப்பு பணி, கடற்கரை பாதுகாப்பு ரோந்து பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை மெரினாவில் குதிரைப்படை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தினமும் காலையில் 8 குதிரைகள், மாலை 8 குதிரைகள் மெரினா பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்படுகின்றன. சென்னையில் கூடுதல் காவல் ஆணையர் மேற்பார்வையில், மோட்டார் வாகன பிரிவு துணை ஆணையர் மற்றும் ஒரு ஆய்வாளர் தலைமையில் குதிரைப்படை செயல்பட்டு வருகிறது. குதிரைப்படையில் ஒரு ஆய்வாளர் 30 காவலர்கள் உள்ளனர். சென்னை குதிரைப்படையில் 6 ஆண் குதிரை உட்பட 19 குதிரைகள் உள்ளன. இவர்கள் அல்லாது குதிரைகளை பராமரிப்பதற்கு காவல்துறையில் தனியாக ஆட்கள் உள்ளனர். ஒவ்வொரு குதிரையையும் அடையாளப்படுத்த தனி எண்ணும், பெயரும் வழங்கப்பட்டுள்ளது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "குதிரைப்படை நாயகிகள்". கட்டுரை (தி இந்து). 10 செப்டம்பர் 2017. http://tamil.thehindu.com/society/women/article19651198.ece. பார்த்த நாள்: 11 செப்டம்பர் 2017. 
  2. "சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணியில் குதிரைப்படை: வெளி மாநிலங்களில் இருந்து 15 குதிரைகளை வாங்க திட்டம்". செய்தி (தி இந்து). 10 செப்டம்பர் 2017. http://tamil.thehindu.com/tamilnadu/article19655190.ece. பார்த்த நாள்: 11 செப்டம்பர் 2017.