குண்டாத்ரி

ஆள்கூறுகள்: 13°33′27″N 75°10′13″E / 13.55750°N 75.17028°E / 13.55750; 75.17028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குண்டாத்ரி
Kannada: ಕುಂದಾದ್ರಿ
குண்டாத்ரி மலை
குண்டாத்ரி மலை
உயர்ந்த இடம்
உயரம்826 m (2,710 அடி)
ஆள்கூறு13°33′27″N 75°10′13″E / 13.55750°N 75.17028°E / 13.55750; 75.17028
புவியியல்
Kundadri is located in கருநாடகம்
Kundadri
Kundadri
கர்நாடகாவில் குண்டாத்ரி மலையின் அமைவிடம்

குண்டாத்ரி (Kundadri) என்பது தென்னிந்திய மாநிலமான் கர்நாடகாவின் சிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அடர்ந்த காடுகளைக் கொண்ட ஒரு மலையாகும். (உயரம் - கடல் மட்டத்திலிருந்து 826 மீட்டர்). இது உடுப்பி நகரத்திலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது. தீர்த்தங்கரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட 17ஆம் நூற்றாண்டின் சைனக் கோவிலுக்காக அறியப்பட்ட இந்த மலை, முந்தைய நூற்றாண்டுகளில் ஆச்சார்யர் குந்தகுந்தருக்கு அடைக்கலம் கொடுத்ததாக அறியப்படுகிறது. 23வது தீர்த்தங்கரரான பார்சுவநாதர் இந்த கோவிலின் முக்கிய தெய்வமாக வணங்கப்படுகிறார். இந்த கோவிலின் ஒரு பக்கத்தில் உள்ள பாறையால் உருவாக்கப்பட்ட இரண்டு சிறிய குளங்கள் முந்தைய முனிவர்களுக்கு நீரைக் கொடுத்தன. கர்நாடக அரசு, மும்பையைச் சேர்ந்த ஒரு தொண்டுள்ளம் கொண்டவருடன் கைகோர்த்து [1] மலையின் உச்சிக்கு செல்ல சாலை ஒன்றை அமைத்துள்ளது. [2]

வரலாறு[தொகு]

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, குந்தகுந்தர் ஆச்சார்யர் என்ற சமண முனிவர் இங்கு தங்கி, இந்த சமண புனித இடத்தை உருவாக்கினார்.[3] சமண முனிவர்களின் கற்சிலைகளைக் கொண்டு கோயில் கட்டப்பட்டுள்ளது. அந்த இடம் ஒதுக்குப்புறமாக இருப்பதால், மறைந்திருக்கும் புதையலை கண்டுபிடிப்பதற்காக கல் சிலைகளை சேதப்படுத்தும் முயற்சிகள் நடந்தன. [4]

போக்குவரத்து[தொகு]

குண்டாத்ரி சுமார் 80 கிமீ தொலைவில் உள்ளது. மாவட்டத் தலைமையகமான சிமோகாவிலிருந்தும், தீர்த்தஅள்ளி நகரத்திலிருந்தும் சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சிமோகாவிலிருந்து, தேசிய நெடுஞ்சாலை எண்-13 (தீர்த்தஅள்ளி சாலை) வழியாக தீர்த்தஅள்ளிக்கு செல்ல வேண்டும். உடுப்பியிலிருந்து தீர்த்தஅள்ளிக்கு ஏராளமான பேருந்துகள் உள்ளன. உடுப்பி தொடர் வண்டி நிலையத்திலிருந்து தீர்த்தஅள்ளி 86 கி.மீ. தொலைவில் உள்ளது. அருகிலுள்ள தொடர் வண்டி நிலையம் சிமோகாவில் உள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் மங்களூர் சர்வதேச விமான நிலையம் ஆகும் .

புகைப்படங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Fernadis, Ronald Anil (30 September 2009). "On top of the world". Deccan Herald. http://www.deccanherald.com/content/38677/banner-300x250.swf. பார்த்த நாள்: 3 October 2014. 
  2. Veerendra, P.M. (29 November 2011). "Agumbe to be declared plastic-free zone". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/agumbe-to-be-declared-plasticfree-zone/article2669799.ece. பார்த்த நாள்: 3 October 2014. 
  3. Fernadis, Ronald Anil (30 September 2009). "On top of the world". Deccan Herald. http://www.deccanherald.com/content/38677/banner-300x250.swf. பார்த்த நாள்: 3 October 2014. Fernadis, Ronald Anil (30 September 2009). "On top of the world". Deccan Herald. Retrieved 3 October 2014.
  4. Staff Reporter (7 November 2011). "Statue in front of Jain temple damaged". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/statue-in-front-of-jain-temple-damaged/article2605304.ece. பார்த்த நாள்: 3 October 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டாத்ரி&oldid=3305177" இலிருந்து மீள்விக்கப்பட்டது