குடியம் குகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குடியம் குகை
குடியம் குகையின் நிலவியல் அமைவு

குடியம் குகை (Gudiyam Cave) தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ளது. இது ஒரு தொன்மையான வரலாற்றுக் குகைவாழிடம் ஆகும். சென்னையிலிருந்து 70 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இக்குகையானது தொல்லியல் ஆய்வாளரான இராபர்ட் புருசு ஃபூட்டால் கண்டுபிடிக்கப்பட்டது.

தொல்லியல் ஆய்வுச் சான்றுகளின்படி இக்குகைகள் பழைய கற்கால மனிதர்களின் வாழிடங்களாக இருந்தவையெனக் கருதப்படுகின்றன. இந்தியத் தொல்லியல் அகழ்வாய்வுத் துறையினரால் இவ்விடம் 1962-64 ல் அகழ்வாய்வு செய்யப் பட்டது.[1]

இக்குகை குறித்து ரமேஷ் யந்த்ரா இயக்கிய ஆவணப்படம் குடியம் குகைகள் என்ற ஆவணப்படம் [2] கேன்ஸ் திரைப்பட விழா, 2015 இல் திரையிடப்படுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. [3] [4]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

மேலதிகப் படங்களுக்கு:

"https://ta.wikipedia.org/w/index.php?title=குடியம்_குகை&oldid=2456107" இருந்து மீள்விக்கப்பட்டது