குஞ்சா போச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குஞ்சா போச்சி
Kunja Bojji
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1985–1999
முன்னையவர்எரையா ரெட்டி முர்லா
பின்னவர்சுன்னம் இராசையா
தொகுதிபத்ராச்சலம் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1926-02-10)பெப்ரவரி 10, 1926
அதாவி
இறப்புஏப்ரல் 12, 2021(2021-04-12) (அகவை 95) வெங்கண்ணகுதேம், கம்மம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாக்சியம்)
துணைவர்சுப்பலட்சுமி

குஞ்சா போச்சி (Kunja Bojji) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1926 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] ஆந்திரப்பிரதேச அரசியலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். கோயா இனத்தைச் சேர்ந்த இவர் 1985 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஆந்திர பிரதேச சட்டமன்றத்தில் பத்ராசலம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2][3]

1950 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தின் போது கொரில்லாக்களுக்கு ஆதரவாக குஞ்சா போச்சி இருந்தார். 1970 ஆம் ஆண்டுகளில் இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். சமிதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1985 ஆம் ஆண்டில் மற்ற இரண்டு இந்தியப் பொதுவுடைமைக் கட்சி தலைவர்களுடன் நக்சலைட்களால் பதுங்கியிருந்து தாக்கப்பட்டார் இவரது தோழர்கள் கொல்லப்பட்டனர்.[4]

ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கு 1985, 1989 மற்றும் 1994 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் முறையே 42.37%, 50.82% மற்றும் 62.55% வாக்குகளைப் பெற்றுத் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதியன்று தனது 95 ஆவது வயதில் குஞ்சா போச்சி கோவிட்டு பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kunja Bojji: పెన్షన్ డబ్బులూ ప్రజల కోసమే..తుది శ్వాస వరకూ ప్రజాసేవలోనే..'కుంజా బొజ్జి' ఓ అరుదైన నాయకుడు!". 12 April 2021.
  2. The Hindu. This three-time MLA doesn’t have a house
  3. Election Commission of India. 274 - Bhadrachalam (ST) Assembly Constituency
  4. Seshu, Ravindra (2018-11-03). "Khammam: Kunja Bojji sets the bar high for aspirants". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-29.
  5. Sridhar, P. (12 April 2021). "Veteran CPI (M) leader Kunja Bojji passes away". The Hindu. https://www.thehindu.com/news/national/telangana/veteran-cpi-m-leader-kunja-bojji-passes-away/article34301630.ece. 
  6. "Telangana: Memorial Stupas in Memory of Comrades Kunja Bojji and Sunnam Rajaiah | Peoples Democracy".
"https://ta.wikipedia.org/w/index.php?title=குஞ்சா_போச்சி&oldid=3847805" இலிருந்து மீள்விக்கப்பட்டது