கீதா மேத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீதா மேத்தா
பிறப்பு1943 (அகவை 80–81)
தில்லி, இந்தியா
தொழில்எழுத்தாளர்,ஆவணப்படத் தயாரிப்பாளர்,இதழாளர்
தேசியம்இந்தியா
கல்வி நிலையம்கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்Karma Cola (1979)
A River Sutra (1993)

கீதா மேத்தா (Gita Mehta, பிறப்பு: 1943) என்பவர் ஆங்கில எழுத்தாளர், நூலாசிரியர், தொலைக்காட்சி ஆவணப்படத் தயாரிப்பாளர் என்று புகழ் பெற்ற இந்தியப் பெண்மணி ஆவார்.

பிறப்பும் கல்வியும்[தொகு]

தில்லியில் ஒரியக் குடும்பத்தினருக்கு பிறந்தவர். ஒரிசா முன்னாள் முதலமைச்சர் பிசு பட்நாயக்கின் மகளும் இந்நாள் ஒரிசா முதலமைச்சரான நவீன் பட்நாயக்கின் அக்காளும் ஆவார். தொடக்கத்தில் இந்தியாவிலும் மேல் நிலையில் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிச்சிலும்[1] கல்வி பயின்றார்.

படைப்புகள்[தொகு]

கீதா மேத்தா கதைகளையும், கதைகள் அல்லாத பிற நூல்கள் ஆகியவற்றையும் எழுதினார்.அவற்றில் இந்திய வரலாறு, நாகரிகம், பண்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடைய பல செய்திகள் உள்ளன. ஆங்கில நூல்களை எழுதியதோடு, இங்கிலாந்து, அமெரிக்கா ஐரோப்பா ஆகிய பகுதிகளின் தொலைக்காட்சிகளுக்காக ஆவணப்படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார். வங்காளதேசப் போரைப் பற்றிய ஆவணப் படங்களும் தயாரித்து இருக்கிறார். கீதா மேத்தாவின் கணவரான சானி மேத்தா, நூல்கள் பதிப்புத் தொழில் செய்கிறார். இவர்களுடைய குடும்பம் நியூயார்க்கில் உள்ளது.

நூல்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Upfront daughter of the revolution: Gita Mehta". Vogue. April 1997. pp. 114, 120, 124.
  2. Mehta, Gita (1979). Karma Kola, Marketing the Mystic East. New York: Simon and Schuster. பக். 201. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-671-25083-3. https://archive.org/details/karmacolamarketi00meht. 
  3. Smith, Wendy, 'Gita Mehta: Making India Accessible'
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதா_மேத்தா&oldid=3581011" இலிருந்து மீள்விக்கப்பட்டது