கிழவன் கள்ளி
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கிழவன் கள்ளி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Core eudicots |
வரிசை: | Caryophyllales |
குடும்பம்: | கள்ளி |
சிற்றினம்: | Pachycereeae |
பேரினம்: | Cephalocereus |
இனம்: | C. senilis |
இருசொற் பெயரீடு | |
Cephalocereus senilis (Haw.) Pfeiff. |
கிழவன் கள்ளி (Cephalocereus senilis, Old Man Cactus) என்பது கள்ளி இனத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இது கிழக்கு மெக்சிக்கோவிலுள்ள குவானாசுவாடா மற்றும் கிடல்கோ இடங்களுக்கு உரித்தான தாவரமாகும். கிழவன் கள்ளி காட்டில் அச்சுறுத்தலுக்குள்ளான இனமாகும்.
தோற்றக்குறிப்பு[தொகு]
இவ்வகைக் கள்ளிகள் 5 மீட்டர் முதல் 15 மீட்டர் (சுமார் 45 அடி) உயரமாக வளரக்கூடியவை. இவற்றின் வெண்மையான நீண்ட முடிகள் காரணமாக இவை கிழவன் கள்ளி என்றழைக்கப்படுகின்றன. வயது குறைந்த கள்ளிகளில் அதிக அளவில் காணப்படும் இம்முடிகள் வயது ஆக ஆகக் குறைந்து விடுகின்றன. இவற்றின் பழங்கள் சிவப்பு, மஞ்சள், அல்லது வெண்ணிறத்தில் இருக்கும். இவை கிட்டத்தட்ட 10-20 வயது வரை பூப்பது இல்லை.