கிழக்கு கர்பி-ஆங்லாங் வனவிலங்கு சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிழக்கு கர்பி ஆங்லாங் வனவிலங்கு சரணாலயம் (East Karbi-Anglong Wildlife Sanctuary) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது. [1] கர்பி ஆங்கலாங்கு மாவட்டத்தில் திபு நகரத்திலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் இச்சரணாலயம் அமைந்துள்ளது. 221.81 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கிழக்கு கர்பி ஆங்கலாங்கு சரணாலயம் பரவியுள்ளது.[2] கடல் மட்டத்திலிருந்து 80 முதல் 500 மீட்டர் வரை சரணாலயத்தின் அமைவிடம் மாறுபடுகிறது.

அசாம் மாநில அரசாங்கம் 2000 ஆம் ஆண்டு சூலை மாதம் 27 ஆம் நாளன்று இவ்வனப்பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவித்தது.[3]

வளிமண்டலம்[தொகு]

ஆண்டு மழைப்பொழிவு சுமார் 1800 மில்லிமீட்டர் ஆகவும் சராசரி வெப்பநிலை சுமார் 34 பாகை செல்சியசு ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 6 °செல்சியசு ஆகவும் பதிவி செய்யப்பட்டுள்ளது.

தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்[தொகு]

கிழக்கு கர்பி ஆங்லாங் வனவிலங்கு சரணாலயத்தில் புலி, யானை, கரடி, வெள்ளைப் புருவக் குரங்கு , சிறுத்தை, பெரிய புள்ளிச் சிறுத்தை , இந்திய எறும்புண்ணி, இந்திய சிறிய புனுகுப் பூனை , பன்றி வால் கொண்ட மந்தி, சிறுத்தை பூனை, கடமான் போன்ற பல வகையான வனவிலங்குகள், பாலூட்டிகள் உள்ளன. கேளையாடு , முள்ளம்பன்றி, முங்கூசு, இராச நாகம், மானிட்டர் பல்லி, மலைப்பாம்பு போன்ற ஊர்வன விலங்குகளும் இச்சரணாலயத்தில் வாழ்கின்றன. சுமார் 250 பறவை இனங்கள் இங்கு இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சில, மலை இருவாட்சி பறவைகள் , பொதுவான பச்சை புறா, சிறிய துடுப்புவால் கரிச்சான் , கருந்தலை மாங்குயில் போன்ற பறவைகளும் இங்கு காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Important bird areas in India: priority sites for conservation. https://books.google.com/books?id=G98PAQAAMAAJ. 
  2. "Assam Agri Business: Statistical Handbook" (PDF). Archived from the original (PDF) on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 20 March 2016.
  3. Information on Forest Management of Karbi Anglong District