கிழக்கத்தியச் சிறிய ஆந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிழக்கத்தியச் சிறிய ஆந்தை
Oriental Scops Owl (rufous morph) from Guwahati, Assam, India
CITES Appendix II (CITES)[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஓடசு
இனம்:
ஓ. சுனியா
இருசொற் பெயரீடு
ஓடசு சுனியா
(கோட்ஜ்சூசன், 1836)

கிழக்கத்தியச் சிறிய ஆந்தை (Oriental scops owl)(ஓடசு சுனியா) என்பது கிழக்கு மற்றும் தெற்கு ஆசியாவில் காணப்படும் ஒரு வகை சிறிய ஆந்தை சிற்றினம் ஆகும்.

விளக்கம்[தொகு]

கிழக்கத்தியச் சிறிய ஆந்தை மாறுபட்ட இறகுகள் கொண்ட, மஞ்சள்-கண்களைக் கொண்ட ஆந்தை ஆகும். வெள்ளை நிற கழுத்துப் பட்டை, நன்கு குறிக்கப்பட்ட அடிப்பகுதி ஆகியவற்றால் கழுத்துப்பட்டை சிறிய ஆந்தையிலிருந்து வேறுபடுத்தி அறியலாம். சாம்பல், செம்பழுப்பு என இரண்டு வண்ண உருவங்கள் உள்ளன. இடைநிலை வடிவங்களுடன் கூடிய ஆந்தைகளும் காணப்படுகின்றன. பாலினங்கள் தோற்றத்தில் ஒத்தவை. இந்த சிற்றினம் "டக் டாக் டாரோக்" என மீண்டும் மீண்டும் ஒலிக்கும் அழைப்பினைக் கொண்டுள்ளது.[2]

வாழிடம்[தொகு]

கிழக்கத்தியச் சிறிய ஆந்தை கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா முழுவதும் மிகவும் பரவலான காணப்படுகிறது. இது உருசியாவிலிருந்து தாய்லாந்து வரையிலான உலர் இலையுதிர் காடுகளில் காணப்படுகிறது. பிப்ரவரி-ஏப்ரல் மாதங்களில் ஆந்தை மரங்களில் உள்ள பொந்துகளில் கூடு கட்டும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 BirdLife International (2021). "Otus sunia". IUCN Red List of Threatened Species 2021: e.T22728969A206482277. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T22728969A206482277.en. https://www.iucnredlist.org/species/22728969/206482277. பார்த்த நாள்: 14 February 2022. 
  2. "Oriental Scops-owl (Otus sunia)". Handbook of the Birds of the World. பார்க்கப்பட்ட நாள் 4 April 2018.