கிளைசினமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிளைசினமைடு
Glycinamide.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-அமினோ அசிட்டமைடு
இனங்காட்டிகள்
598-41-4
1668-10-6 (HCl)
ChemSpider 62242
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 69020
பண்புகள்
C2H6N2O
வாய்ப்பாட்டு எடை 74.08 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

கிளைசினமைடு (Glycinamide) என்பது C2H6N2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். கிளைசின் என்ற அமினோ அமிலத்தின் அமைடு வழிப்பெறுதியே கிளைசினமைடு ஆகும்.

கிளைசினமைடின் ஐதரோகுளோரைடு உப்பான கிளைசினமைடு ஐதரோகுளோரைடு குட்சுவின் தாங்கல்கள் பட்டியலில் இடம்பெறும் ஒரு தாங்கலாகும். உயிர்வேதியியல் ஆய்வுகளில் பயன்படும் அளவுக்கு உடலியல் வீச்சுக்கேற்ற pH மதிப்பு இதற்கு உள்ளது. கிளைசினமைடு ஐதரோகுளோரைடின் காடித்தன்மை எண் (pKa) 20 பாகை செல்சியசு வெப்பநிலையில் 8.20 என்ற உடலியல் pH மதிப்புக்கு அருகில் உள்ளது. இக்காடித்தன்மை மதிப்பு கிளைசினமைடு ஐதரோகுளோரைடை உயிரணு வளர்ப்புக்கு பயனுள்ளதாக மாற்றுகிறது. மேலும் இதன் ΔpKa/°செல்சியசு மதிப்பு -0.029 ஆகும். நீரில் இவ்வுப்பின் கரைதிறன் 0 ° செல்சியசில் 6.4 மோல்/லிட்டர் ஆகும்.

பியூரின் உயிர்த் தொகுப்பு வினையில் இடைநிலை விளைபொருளாகத் தோன்றும் கிளைசினமைடு ரிபோநியூக்ளியோடைடு தயாரிப்புக்குரிய ஒரு வினைபொருளாக இச்சேர்மம் பயன்படுகிறது [1].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளைசினமைடு&oldid=2750178" இருந்து மீள்விக்கப்பட்டது