கிளீவ்லாந்து தியாகராஜர் விழா
Appearance
கிளீவ்லேண்ட் தியாகராஜா திருவிழா (Cleveland Thyagaraja Festival) என்பது அமெரிக்காவின்ஒகையோவிலுள்ள கிளீவ்லாந்தில் நடைபெறும் தென்னிந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனங்களுக்கான 12 நாள் திருவிழாவாகும். இது ஒவ்வொரு ஆண்டும் உயிர்ப்பு ஞாயிறு வார இறுதியில் நடைபெறுகிறது. இந்த விழா தென்னிந்திய இசைக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றியவரும், சிறந்த இசை ஞானியாக விளங்கியவருமான தியாகராஜரை கௌரவிக்கும் கொண்டாட்டமாகும். தியாகராஜர், தெலுங்கு மற்றும் சமசுகிருத மொழியில் ஆயிரக்கணக்கான பக்தி பாடல்களை இயற்றினார். 1978 ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த விழா, இந்தியாவுக்கு வெளியே மிகப்பெரிய தென்னிந்திய பாரம்பரிய இசை மற்றும் நடன விழாவாக வளர்ந்துள்ளது.[1] இந்த விழா அமெரிக்கா முழுவதிலுமிருந்தும், கனடாவிலிருந்தும் உலகின் பிற பகுதிகளிலிருந்தும் பார்வையாளர்களை ஈர்க்கிறது.