தியாகராஜர் ஆராதனை
| தியாகராஜ ஆராதனை | |
|---|---|
திருவையாற்றிலுள்ள தியாகராஜர் சமாதி | |
| வகை | கருநாடக இசை |
| நாள் | ஜனவரி / பிப்ரவரி |
| அமைவிடம்(கள்) | தமிழ்நாட்டின் திருவையாற்றில் அமைந்துள்ள தியாகராஜரின் சமாதியில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலை.[1] |
| இயக்கத்திலுள்ள ஆண்டுகள் | 1846–தற்போது வரை |
தியாகராஜ ஆராதனை (Tyagaraja Aradhana) என்பது ஒவ்வொரு ஆண்டும் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரும் தியாக பிரம்மம் என்று போற்றப்படுபவரும் தென்னிந்திய இசைக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றியவருமான தியாகராஜரைப் போற்றி நடத்தப்படும் ஒரு இசைத் திருவிழாவாகும். இது ஆந்திரப் பிரதேசம், கருநாடகம் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நிகழ்த்தப்படுகிறது.[2][3] தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாற்றில், தியாகராஜர் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் கொண்டாடப்படுகிறது.[4][5] அவர் இறந்த புஷ்ய பகுல பஞ்சமி நாளில் இத்திருவிழா நடைபெறும். அங்கு இசைக்கலைஞர்கள் தியாகராஜர் இயற்றிய பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடுவார்கள்.[6][7]
வரலாறு
[தொகு]இந்த இசைத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தியாகராஜரின் நினைவு நாளில் நடத்தப்படுகிறது. இது இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் பஞ்சமி அன்று நிகழ்த்தப்படுகிறது. இத்திருவிழாவினை சிறீ தியாகபிரம்ம மகோத்சவ சபை நடத்துகிறது. இந்தியாவின் தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் அமைந்துள்ள தியாகராஜரின் சமாதி வளாகத்தில் ஆராதனை நடத்தப்படுகிறது.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tirupati: Aradhana Mahotsavam of Sri Thyagaraja held". The New Indian Express. 4 January 2016. https://www.newindianexpress.com/states/andhra-pradesh/2018/jan/07/tirupati-aradhana-mahotsavam-of-sri-thyagaraja-held-1746629.html.
- ↑ "Ritual Tyagaraja aradhana in Bengaluru this year". Deccan Herald (in ஆங்கிலம்). 2020-01-10. Retrieved 2023-02-20.
- ↑ Ashraf, Fathima. "300 artists to pay homage to Thyagaraja at this music festival". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/kannada/music/300-artists-to-pay-homage-to-thyagaraja-at-this-music-festival/articleshow/96850180.cms.
- ↑ "Saint Thyagaraja temple, Thiruvaiyaru". templesofindia.org (in ஆங்கிலம்). Retrieved 2023-02-20.
- ↑ "Renovated house of St. Thyagaraja to be inaugurated shortly" (in en-IN). The Hindu. 2010-05-19. https://www.thehindu.com/news/national/tamil-nadu/Renovated-house-of-St.-Thyagaraja-to-be-inaugurated-shortly/article16301942.ece.
- ↑ Friday Review (6 January 2006). "Tiruvaiyaru gears up - CHEN". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/tiruvaiyaru-gears-up/article3216630.ece.
- ↑ Pillai, S. Subramania (2019). Tourism in Tamil Nadu: Growth and Development. MJP Publisher. p. 14. ISBN 978-81-8094-432-1.
- ↑ "Saint Thyagarajar :: Thyagaraja Aradhana Festival". Archived from the original on 25 January 2009. Retrieved 2 March 2009.