கிளீசே 667 சிபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிளீசே 667 சிபி (Gliese 667 Cb) என்பது கிளீசே 667 மூன்று விண்மீன் அமைப்பின் உறுப்பினரான கிளீசே 667 சி விண்மீனைச் சுற்றி வரும் ஒரு புறக்கோள் ஆகும். இது இந்த அமைப்பில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய கோள். இது ஒரு மீப்புவி அல்லது சிறு-நெப்டியூன் ஆகும். வட்டணை நிலைப்புப் பகுப்பாய்வு அதன் குறைந்த அளவு பொருண்மை இரண்டு மடங்குக்கு மேல் இருக்க முடியாது என்பதைக் குறிக்கிறது. இது வாழக்கூடிய மண்டலத்தில் விண்மீனுக்கு மிக அருகில் சுற்றுகிறது. என்றாலும் இது நாம் அறிந்தபடி வாழ்வதற்கு ஏற்றது அல்ல. [1] கிளீசே 667 சிபி ஒரு பாறைக் கோள் அல்ல என்பதளிதன் மையப்பிறழ்வுப் பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது.

கோள் ஓதத்தால் பூட்டப்பட வாய்ப்புள்ளது. இதனால், கோளின் ஒரு பக்கம் நிலையான பகல் வெளிச்சத்திலும், மறுபக்கம் நிலையான இரவின் இருளிலும் உள்ளது. [2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளீசே_667_சிபி&oldid=3835001" இலிருந்து மீள்விக்கப்பட்டது