கிளீசு 667

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிளீசு 667 எ /பி /சி
Diagram showing star positions and boundaries of the constellation of Scorpius and its surroundings
Cercle rouge 100%.svg

விருச்சிக விண்மீன் குழாத்தில்- கிளீசு 667
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை விருச்சிக விண்மீன் குழாம்
வல எழுச்சிக் கோணம் 17h 18m 57.16483s[1]
நடுவரை விலக்கம் −34° 59′ 23.1416″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)5.91/7.20/10.20[2]
இயல்புகள்
விண்மீன் வகைK3V + K5V + M1.5V[2][3]
U−B color index0.83/???/1.17
B−V color index1.03/???/1.57
மாறுபடும் விண்மீன்A: suspected
B: unknown
C: flare star
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)6.5[4] கிமீ/செ
Proper motion (μ) RA: 1129.76[1] மிஆசெ/ஆண்டு
Dec.: −77.02[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)146.29 ± 9.03[1] மிஆசெ
தூரம்22 ± 1 ஒஆ
(6.8 ± 0.4 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)7.07/8.02/11.03
விவரங்கள்
GJ 667 AB
திணிவு0.73 / 0.69[5] M
ஆரம்0.76 / 0.70[2] R
GJ 667 C
திணிவு0.31[4] M
ஆரம்0.42[2] R
ஒளிர்வு0.0137[4] L
வெப்பநிலை3,700 ± 100[4] K
சுழற்சி105 days [4]
அகவை2–10[4] பில்.ஆ
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
NStEDdata
ARICNSdata
Extrasolar Planets
Encyclopaedia
data

கிளீசு 667 (Gliese 667) என்பது விருச்சிக விண்மீன் குழாத்திலுள்ள ஒரு மும்மடி- விண்மீன் தொகுதி ஆகும்.இதிலுள்ள விண்மீன்கள் மூன்றும் சூரியனை விட அதிக குறைவான திணிவு (நிறை) உடையது.இது புவியிலிருந்து 6.8 புடைநொடி (22.1 ஒளியாண்டுகள்) தூரத்தில் உள்ளது.இது மற்ற எந்த விண்மீனாலும் ஈர்ப்பு விசையால் கட்டுப்படுத்தப் படவில்லை.வெறும் கண்களால் காணும் போது இந்த விண்மீன் தொகுதி ஒரே வீண்மீன் போல தோன்றும் , பார்ப்பதற்கு மங்கலான விண்மீன் போல இருக்கும்.இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 5.89 ஆகும்.

வீண்மீன் தொகுதி[தொகு]

கிளீசு 667 வீண்மீன் தொகுதியிலுள்ள மூன்று வீண்மீன்களில் கிளீசு 667 எ மற்றும் கிளீசு 667 பி அகிய இரண்டும் பிரகாசமான வீண்மீன்கள் ஆகும்.இந்த இரண்டு வீண்மீன்களுக்கும் இடையில் உள்ள கோணத் தொலைவு 1.81 பாகைத்துளிகள்.இதன் சுற்றுப்பாதையின் வட்டவிலகல் 0.58. இந்த இரண்டு வீண்மீன்களுக்கும் இடைப்பட்ட தூரம் சராசரியாக 12.6 வானியல் அலகுகள் (தோரயமாக சூரியனுக்கும் புவிக்கும் இடையில் உள்ள தூரத்தைப் போல 13 மடங்கு). இதன் சுற்றுப்பாதையின் வட்டவிலகல்கள் காரணமாக இந்த இரண்டு வீண்மீன்களுக்கும் 5 வானியல் அலகுகள் தூரம் வரை அருகிலும், 20 வானியல் அலகுகள் வரை விலகியும் செல்கிறது.[note 1][6]

இந்த விண்மீன் தொகுதியில், மூன்றாவது வீண்மீன், கிளீசு 667 சி,இது கிளீசு 667 எபி ஜோடியை, 30 சுற்றுப்பாதையின் வட்டவிலகலில் சுற்றி வருகிறது. விண்மீன் தொகுதிக்கும் விண்மீனுக்கும் இடைப்பட்ட சராசரி தூரம் 230 வானியல் அலகுகள்.[4][7]

கிளீசு 667 எ[தொகு]

கிளீசு 667 எ, கிளீசு 667 வீண்மீன் தொகுதியிலுள்ள மிகப் பெரிய விண்மீன் ஆகும்.இது K-வகை முதன்மைத் தொடர் விண்மீன்(K-type main-sequence star) ஆகும்.இதன் விண்மீன் வகைப்பாடு K3V.[2].இது சூரியயனைப் போல 73% திணிவையும்(நிறை)[5], 76%[2] ஆரத்தையும் உடையது.ஆனால் சூரியனை ஒப்பிடுகையில் 12-13% கதிர் ஒளியை மட்டுமே வீசுகிறது. இதில் சூரியனைப் போல ஹைட்ரஜன் மற்றும் ஈலியம் போன்ற தனிமங்கள் இல்லை[8], அதற்கு பதிலாக வேறு தனிமங்கள் இருப்பதாக கருதுகிறார்கள்.இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 6.29 ஆகும்.

கிளீசு 667 பி[தொகு]

கிளீசு 667 எ வைப் போன்று கிளீசு 667 பி யும் K-வகை முதன்மைத் தொடர் விண்மீன்(K-type main-sequence star) ஆகும்.இதன் விண்மீன் வகைப்பாடு K5V.இது சூரியனைப் போல 69%[5] திணிவு(நிறை)உடையது.ஆனால் சூரியனை ஒப்பிடுகையில் 5% கதிர் ஒளியை மட்டுமே வீசுகிறது.இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 7.24 ஆகும்.

கிளீசு 667 சி[தொகு]

கிளீசு 667 சி, கிளீசு 667 வீண்மீன் தொகுதியிலுள்ள மிகப் சிறிய விண்மீன் ஆகும். இதன் விண்மீன் வகைப்பாடு M1.5.இது சூரியனைப் போல 31%[5] திணிவையும்(நிறை), 42%[2] ஆரத்தையும் உடையது.ஆனால் சூரியனை ஒப்பிடுகையில் 1.4% கதிர் ஒளியை மட்டுமே வீசுகிறது. இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 10.25 ஆகும்.இது M-வகை விண்மீன் ஆகும்.[9] இதற்கு 5 கோள்கள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது, 7 கோள்கள் வரை இருக்க வாய்ப்புள்ளது.

கோள்கள் தொகுதி[தொகு]

கிளீசு 667 சிபி, கிளீசு 667 சிசி, கிளீசு 667 சிஇ, கிளீசு 667 சிஃப் மற்றும் கிளீசு 667 சிடி என 5 புறக்கோள்கள் கிளீசு 667 C யை சுற்றி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் கிளீசு 667 சிஜி மற்றும் கிளீசு 667 சிகச் ஆகிய இரண்டு புறக்கோள்கள் உறுதி செய்யப்படவில்லை.

கிளீசு 667 சிபி மற்றும் கிளீசு 667 எ/பி ஒரு கற்பனைப் புகைப்படம்
கிளீசு 667 சிசியிலிருந்து கிளீசு 667 எ/பி யை பார்ப்பது போன்ற கற்பனை புகைப்படம்
கிளீசு 667 சி தொகுதி
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(day)
வட்டவிலகல்
பி 5.94 - 12 M 0.050 432 ± 0.000 001 7.2006 0.112
கச் (உறுதிப்படுத்தப்படவில்லை) ≥1.3 - 2.6 M 0.085 ~17 >30°
சி ≥3.86 - 7.8 M 0.125 07 ± 0.000 06 28.1231 0.001
சிஃப் ≥1.94 - 4 M 0.155 75 ± 0.000 17 39.0819 0.001
≥2.68 - 5.4 M 0.212 57 ± 0.000 35 62.2657 0.001
டி ≥5.21 - 10.4 M 0.275 8 ± 0.000 3 92.0926 0.019
சிஜி ≥4.41 - 8.8 M 0.538 9 ± 0.000 5 251.519 0.107

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 van Leeuwen, F. (November 2007), "Validation of the new Hipparcos reduction", Astronomy and Astrophysics 474 (2): 653–664, doi:10.1051/0004-6361:20078357, Bibcode: 2007A&A...474..653V 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Pasinetti Fracassini, L. E. et al. (February 2001), "Catalogue of Apparent Diameters and Absolute Radii of Stars (CADARS) - Third edition - Comments and statistics", Astronomy and Astrophysics 367: 521–524, doi:10.1051/0004-6361:20000451, Bibcode: 2001A&A...367..521P  Note: see VizieR catalogue J/A+A/367/521.
  3. "Toward spectral classification of L and T dwarfs: infrared and optical spectroscopy and analysis", The Astrophysical Journal (The American Astronomical Society), January 2002, http://iopscience.iop.org/0004-637X/564/1/466/pdf/0004-637X_564_1_466.pdf, பார்த்த நாள்: 2012-02-14 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 Anglada-Escude, Guillem et al. (February 2012), "A planetary system around the nearby M dwarf GJ 667C with at least one super-Earth in its habitable zone", The Astrophysical Journal Letters accepted, Bibcode: 2012arXiv1202.0446A, http://arxiv.org/pdf/1202.0446v1.pdf 
  5. 5.0 5.1 5.2 5.3 Tokovinin, A. (September 2008), "Comparative statistics and origin of triple and quadruple stars", Monthly Notices of the Royal Astronomical Society 389 (2): 925–938, doi:10.1111/j.1365-2966.2008.13613.x, Bibcode: 2008MNRAS.389..925T 
  6. Bowman, Richard L.. "Interactive Planetary Orbits - Kepler's Laws Calculations". பார்த்த நாள் 23 February 2012.
  7. Philip C. Gregory. Additional Keplerian Signals in the HARPS data for Gliese 667C from a Bayesian Re-analysis. Bibcode: 2012arXiv1212.4058G. 
  8. Cayrel de Strobel, G.; Soubiran, C.; Ralite, N. (July 2001), "Catalogue of [Fe/H] determinations for FGK stars: 2001 edition", Astronomy and Astrophysics 373: 159–163, doi:10.1051/0004-6361:20010525, Bibcode: 2001A&A...373..159C 
  9. "The Colour of Stars", Australia Telescope, Outreach and Education (Commonwealth Scientific and Industrial Research Organisation), December 21, 2004, http://outreach.atnf.csiro.au/education/senior/astrophysics/photometry_colour.html, பார்த்த நாள்: 2012-01-16 

குறிப்புகள்[தொகு]

  1. இதன் சுற்று வட்டப் பாதை புவியிலிருந்து கற்பனையாக ஒரு கோடு வரைந்தால் 128° சாய்ந்துள்ளது.தோரயமாக ஒரு முறை சுற்றி 42.15 ஆண்டுகள் வர எடுத்துக் கொள்கிறது..
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளீசு_667&oldid=2746387" இருந்து மீள்விக்கப்பட்டது