கிளாஸ் எப்னர்
கிளாஸ் எப்னர் | |
---|---|
2007இல் கிளாஸ் எப்னர் | |
பிறப்பு | 8 ஆகத்து 1964 (அகவை 60) வியன்னா |
படித்த இடங்கள் |
|
பணி | எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் |
சிறப்புப் பணிகள் | Hominid |
இணையம் | http://www.klausebner.eu/ |
கிளாஸ் எப்னர் (Klaus Ebner, பிறப்பு: ஆகஸ்ட் 8,1964) அவுஸ்திரியாவின் வியன்னா நகரில் வாழும் ஓர் எழுத்தாளர். மொழிபெயர்ப்பு மற்றும் கவிதை வடிப்பிலும் பெயர் பதித்தவர். அவரது கவிதைகள் ஜெர்மன் மொழிலும், கடலான் மொழியிலும் எழுதப்பட்டுள்ளன[1]. அவர் அவுஸ்திரியா எழுத்தாளர் மன்றங்கள் GAV[2] & OSV உறுப்பினர் ஆவார்.1980-களில் கதைகளை பத்திரிக்கைகளுக்கு அனுப்ப ஆரம்பித்தார்.1990களில் கணினி மென்பொருளில் புத்தகங்கள் எழுதிவந்தார்.கடலான் தலைப்புகளில் பல வித கலாச்சார கட்டுரைகளையும் யூத பழக்கவழக்கங்களை வைத்து கதைகளையும் எழுதியுள்ளார். இவரது முதல் கதை தொகுப்பு 2007ஆம் ஆண்டில் வெளியானது. 2008-ஆம் ஆண்டு தன்னுடைய முதல் குறுநாவலான ஹோமனிட்(Homonide)-ஐப் பதிப்பித்தார். தன்னுடைய எழுத்துப் பணிக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். ஆத்திரிய இலக்கிய விமர்சகர்கள் இவருடைய கவிதை நடையை மிகவும் புகழ்ந்துள்ளனர். இவர் வியன்னா நகரில் தன் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
வாழ்க்கை
[தொகு]1980களில் வியன்னா பல்கலைக்கழகத்தில் ஜெர்மன் மொழியும், மொழிபெயர்ப்புக் கலையும் கற்றார்.வியன்னாவின் இலக்கிய இதழ் ஒன்றிற்குப் பணி புரிந்தார்.[3] மொழிபெயர்ப்பாளராக. மொழி ஆசிரியராகத் தகவல்தொழில்நுட்ப மேலாளராகப் பணிகள் புரிந்துள்ளார். 1990 ஆம்ஆண்டில் கணினி மென்பொருள் பற்றிய புத்தகங்கள் எழுதினார். 2001ஆம் ஆண்டு ஐரோப்பாவில் இசுலாம் அடிப்படைவாதம் பற்றிப் பல்கலைக்கழக ஆய்வுக்கட்டுரை எழுதி அது ஜெர்மனியிலும் வெளியானது.[4]
பள்ளிநாட்களிலிருந்தே கிளாஸ் எப்னர் சிறுகதைகளும், கவிதைகளும், வானொலி நாடகங்களும் எழுதி வந்தார். இலக்கிய மற்றும் பண்பாட்டு இதழ்களில் இவை வெளியாயின. 2004 ஆம் ஆண்டிற்குப்பிறகு கூடுதலாக இலக்கியத் தொகுதிகளை வெளியிட்டார்[5]. இன்று புனைவு, புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள்,கவிதைகள் எனப் பல பரிணாமங்களில் வெளிப்பட்டிருக்கிறார். அவரது அரசின் ஆதரவுடன் 2007இல் அன்டோரா சென்று கட்டுரை எழுதியுள்ளார்[6].
எப்னர் பலவித மனிதர்கள், சமூகங்கள், மொழிகள், சமயங்கள் பற்றி எழுதுகிறார்[7]. 2007ஆம் ஆண்டு இவரது கவிதை "a paperman and sick" பன்னாட்டுக் கவிதையரங்கில் சிறப்பான கவிதையாகக் குறிப்பிடப்பட்டது[8].
2008ஆம் ஆண்டு வியன்னாவின் வினேர் வெர்ஸ்டாட்ப்ரீ 2007க்கான விருது பெற்றார். பரிசு பெற்ற சிறுகதை Der Flügel Last (சிறகுகளின் சுமை)புற்றுநோயால் துன்புறும் ஏழுவயதுச் சிறுமியைப் பற்றியது.
கிளாஸ் எப்னர் வியன்னாவில் வாழ்ந்து,பணிபுரிந்து வருகிறார்.
பணி
[தொகு]பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், எப்னர் சிறு கவிதைகளையும், பாடல்களையும், வானொலி நாடகங்களையும் இயற்றியுள்ளார். அவருடைய இப்பணிகள் ஆத்திரியாவின் பல இலக்கிய மற்றும் கலாச்சார இதழ்களில் வெளியிடப்பட்டன. 1988-ல் முதுகலை பட்டம் பெறுவதற்கான ஆராய்ச்சிக் கட்டுரையை பிரெஞ்சு மொழியில் எழுதினார். அதன் தலைப்பு, "கற்பனாவாத காலத்திலிருந்து இன்று வரை பிரெஞ்சு இலக்கியத்தில் கடலான் நாடுகளின் அமைகை". 1987-ல் பதிப்பிக்கப்பட்ட கடலான் நாட்குறிப்பு எனும் பயண அனுபவ புத்தகத்தில் கடலான் கலாச்சாரத்தை பற்றி எழுதியுள்ளார். மேலும் பல கட்டுரைகள் வாயிலாகவும் கடலான் கலாச்சாரத்தை எழுதியுள்ளார்.
1987-ல் அவருக்கு மகன் பிறந்தார். மேலும், அதிகமாகிய பணிச் சுமைகளாலும் அவ்வாண்டில் அவருடைய இலக்கிய பங்களிப்பில் சிறு தொய்வு ஏற்பட்டது. 1990-களில் தன்னுடைய நாவலுக்கு (Feuers Geraun) அதிக கவனம் செலுத்தினார். அதன் முதல் இரண்டு வடிவங்கள் ஆத்திரிய பத்திரிகையான டை ராம்பேவில் முறையே 1994, 1997-ல் வெளியாயின. இவ்விரு அதிகாரங்களில் யூத மற்றும் விவிலியம் பழக்கவழக்கங்களைப் பற்றி எழுதியுள்ளார். அவருடைய இணைய தளத்தில், 2004 வரை, அந்நாவலின் 6 அதிகாரங்கள் வரிசையிடப்பட்டுளன. ஆனால் மொத்தம் 17 பதிப்புகள் 2005-2008 காலத்தில் வரிசையிடப்பட்டுளன.
மேலும் எப்னர் புனைவுகளையும் (புதினங்கள், சிறு கதைகள், சிறு கவிதைகள்) கட்டுரைகளையும் பாடல்களையும் இயற்றியுள்ளார். இடாயிச்சு மற்றும் கடலான் மொழிகளில் இவருடைய படைப்புகள் உள்ளன. ஆத்திரிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 2007-ல் அன்டோரா சென்றார். அங்கு பிரநீஸ் பற்றிய புதினம் ஒன்றை எழுதுவதற்காக சென்றார். கடலான் மொழியில் ஜோசப் நவோரா சான்தேலாலிய-வால் எழுதப்பட்ட L'Absent புதினத்தை ஜெர்மானிய மொழிக்கு பெயர்த்தார். கடலான் கலாச்சாரங்களான பார்சிலோனா மற்றும் அன்டோராவை பற்றிய கலாச்சார கட்டுரைகள் இலக்கிய பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளன. இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பான Lose (Destinies) 2007-ம் வருடம் வெளியிடப்பட்டது. அவற்றுள் இருபத்தி இரண்டு கதைகள் ஏற்கனவே பல பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டவை ஆகும். 2008-ல் மேலும் இரண்டு புனைவுகளை வெளியிட்டார். அதில் அவர்தம் குறுநாவலான ஹோமிநிடும் அடங்கும்.
அவரது இலக்கிய விருதுகள்
[தொகு]- 2008 அவுஸ்திரிய அரசின் இலக்கியத்திற்கான பொருளுதவி
- 2007 வினேர் வெர்ஸ்டாட்ப்ரீ 2007(Wiener Werkstattpreis 2007), வியன்னா
- 2007 அவுஸ்திரிய அரசின் போக்குவரத்து பொருளுதவி
- 2007 சிறப்பு குறிப்பு: Premio Internazionale di Poesia Nosside, ரெக்கியோ
- 2005 பெல்ட்கிர்ஷெர் லிரிக்ப்ரீ(Feldkircher Lyrikpreis) (4வது)
- 2004 லா கடலானா லே லெட்டர் 2004 சிறப்புக் குறிப்பு (La Catalana de Lletres 2004)(பார்சலோனா)
- 1988 எர்ஸ்டர் ஆஸ்டர்ரிசேர்ச்சேர் யுகேன்ட்ப்ரீ (Erster Österreichischer Jugendpreis) - நீல்ஸ்(Nils)நாவலுக்காக
- 1984 இலக்கிய இதழ் டெக்ஸட் (Texte) வானொலி நாடகப் பரிசு (3வது)
- 1982 எர்ஸ்டர் ஆஸ்டர்ரிசேர்ச்சேர் யுகேன்ட்ப்ரீ(Erster Österreichischer Jugendpreis) Das Brandmal/வடு
புத்தகங்கள்
[தொகு]ஜெர்மன் மொழி புத்தகங்கள்
[தொகு]- Hominide/Hominid; குறுநாவல் (ஜெர்மன் மொழியில்), FZA Verlag, வியன்னா 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-9502299-7-4
- Auf der Kippe/விளிம்பில்; சிறுகதைகள் (ஜெர்மன் மொழியில்), Arovell Verlag, Gosau 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-902547-67-5
- Lose/வெற்றிகள்; சிறுகதைகள் (ஜெர்மன் மொழியில்), Edition Nove, Neckenmarkt 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-85251-197-9
கடலான் மொழி புத்தகங்கள்
[தொகு]- Vermells/சிவப்பின் நிறங்கள், கவிதை(கடலான் மொழியில்), SetzeVents Editorial, Urús 2009, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-92555-10-9
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பார்க்க:வாழ்க்கை வரலாறு Auf der Kippe, Gosau 2008, பக்கம் 139.
- ↑ GAV members' list, entry about Klaus Ebner[தொடர்பிழந்த இணைப்பு], retrieved on 2009-02-12.
- ↑ Austrian National Library; see entries about the magazine Texte பரணிடப்பட்டது 2011-01-20 at the வந்தவழி இயந்திரம், Vienna 1983-1986.
- ↑ Ebner, Klaus: Islamischer Fundamentalismus in der EU/Islamic Fundamentalism in the EU; essay (in German), GRIN Verlag, Munich 2001/2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-638-69698-2
- ↑ அவரது ஆக்கங்களின் பட்டியலை அவரது இணையதளத்தில் பதிவிட்ட ஆண்டு உட்பட பார்க்க: www.klausebner.eu
- ↑ See Ebner, Auf der Kippe, p. 139 (biography).
- ↑ See the stories Notruf (Emergency Call), Momentaufnahme (Snapshot) and Der Pflegling (The Foster Son) in: Ebner, Klaus: Lose, Neckenmarkt 2007.
- ↑ See Amoroso, Giuseppe: L'immaginario dei poeti del Nosside 2007 e il loro potere di esprimere il mondo, Città del Sole Edizioni பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-88-7351-184-7, Reggio Calabria 2007; p. 41 (Italian version), p. 49f. (Spanish version), p. 58 (Portuguese version).