கிளாடியா அலெக்சாந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளாடியா அலெக்சாந்தர்
Claudia Alexander
பிறப்பு(1959-05-30)மே 30, 1959
வான்கூவர் பிரித்தானியக் கொலம்பியா, கனடா
இறப்புசூலை 11, 2015(2015-07-11) (அகவை 56)
அர்க்காடியா, கலிபோர்னியா, அமெரிக்கா
துறைகோள் அறிவியல்
பணியிடங்கள்அமெரிக்கப் புவியளக்கை, தாரைச் செலுத்த ஆய்வகம்
கல்வி கற்ற இடங்கள்கலிபோர்னியா பல்கல்லைக்கழகம், பெர்க்கேலி, மிச்சிகான் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்தாமசு கோம்போசி

கிளாடியா யோவான் அலெக்சாந்தர் (Claudia Joan Alexander) (மே 30, 1959 – ஜூலை 11, 2015) ஓர் அமெரிக்கக் கோள் அறிவியலாளரும் ஆராய்ச்சி அறிவியலாளரும் ஆவார். இவர் புவியியற்பியலிலும் கோள் அறிவியலிலும் சிறப்புப் புலமையாளர்.[1][2] இவர் அமெரிக்க புவியளக்கையிலும் நாசாவின் தாரைச் செலுத்த ஆய்வகத்திலும் பணிபுரிந்தார். இவர் வியாழனுக்குச் செல்லும் கலீலியோ விண்கல இலக்குத் திட்ட்த்தின் கடைசி மேலாளர் ஆவார்.[3] மேலும், இவர் தன் இறப்புவரை ஐரோப்பிய விண்வெளி முகமையில் அமெரிக்கா சார்பாகப் பணிபுரிந்த உரோசெட்டா விண்கல இலக்குத்திட்ட மேலாளரும் அறிவியலாளரும் ஆவார். இந்த விண்கலம் 67பி சூரியுமோவ்-கெராசிமெங்கோ வால்வெள்ளியை ஆய்வுசெய்ய உருவாக்கப்பட்டது.[1]

இளமையும் கல்வியும்[தொகு]

இவர் கனடா நாட்டில் பிரித்தானியக் கொலம்பியாவைச் சேர்ந்த வாங்கூவரில் பிறந்தார். ஆனால், இவர் தம் பெற்ரோரால் கலிபோர்னியாவில் அமைந்த சாந்தா கிளாரா நகரில் வளர்க்கப்பட்டார். இவரது தாயார் கய்னெல்லி ஒரு தொழிலிணையத்தில் இண்டெல் நூலகரும் தந்தையார், கரோல்டு ஒரு சமூகப் பணியாளரும் ஆவர். கய்னெல்லிக்கும் கரோல்டுக்கும் சுசான்னி, டேவிடு என இரண்டு குழந்தைகள் உண்டு.[1] இவர் தான் ஓர் இதழியலாளர் ஆகவேண்டும் என விரும்பினார். ஆனால், இவரது பெற்றோர் இவரை ஒரு பொறியாளராக்க விரும்பினர்.[2] அமெசு ஆராய்ச்சி மன்றத்தில் கோடை வேலையொன்றில் சேர்ந்த இவர் , கோள் அறிவியலில் ஆர்வம் கொள்ளத் தொடங்கினார். இவர் பொறியியல் பிரிவொன்றில் வேலைக்கு அமர்த்தப்பட்டாலும், அறிவியல் பிரிவில் நன்கு வேலை செய்ய முடிந்தமையாலும் அப்பணி தனக்கு எளிதாக இருந்ததாலும் மகிழ்ச்சியைத் தந்தமையாலும் திருட்டுத் தனமாக அங்கே சென்று பணிபுரிந்துள்ளார்.[4]

இவர் 1983 இல் புவி இயற்பியலில் பெர்க்கேலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியலில் பட்டம் பெற்றார்,[4] இப்பட்டம் தான் கோள் அறிவியலாளராக உகந்த்தெனக் கருதியுள்ளார்.[4] இவர் 1985 இல் புவி அறிவியலிலும் விண்வெளி அறிவியலிலும் இலாசு ஏஞ்சலீசில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மூதறிவியலில் பட்டம் பெற்றார்.[4] இவரது மூதறிவியல் ஆய்வு வெள்ளிப் பயனீர் வட்டணைக்கலத் தரவுகளைப் பயன்படுத்தியது. இவரது இவ்வாய்வு வெள்ளி வளிமண்டலத்தின் மின்னணுக்கோள விளிம்புநிலைப் புற ஊதாக்கதிர்களில் நிகழும் சூரியச் சுழற்சி வேறுபாடுகளையும் சூரியக் காற்றுடன் அவற்றின் ஊடாட்டங்களையும் ஆராய்ந்தது.[5] இவர் தன் முனைவர் பட்டத்தை வளிமண்டல, கடல், விண்வெளி அறிவியலில் பெற்றார்.[6] இதற்காக இவர் 1993 இல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் விண்வெளி மின்ம ஊடக ஆய்வில் ஈடுபட்டு சிறப்புத் தகைமையும் பெற்றுள்ளார்.[4][7]

வாழ்க்கைப்பணி[தொகு]

இவர் அமெரிக்க புவியியல் அளக்கையில் பணிபுரிந்து கண்டத்திட்டுகளைப் பற்றி ஆய்வு செய்தார். அமெசு ஆய்வு மையத்தில் இருந்தபோது விய்யாழன் நிலாக்கள் சார்ந்த நோக்கீடுகளில் ஈடுபட்டார். பிறகு 1986 இல் நாச்சாவின் தாரைச் செலுத்த ஆய்வகத்தில் சேர்ந்தார்.[7] இவர் கலீலியோ விண்கல மின்ம அளைக் கருவிகளுக்கான அறிவியல் ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்தார்[8] பிறகு கலீலியோ விண்கலத் திட்டத்தின் இறுதிக் கட்டத்தில் அதன் திட்ட மேலாளரானார்.[1] இத்திட்டம் வியாழனின் 21 நிலாக்களையும் கனிமீடு நிலாவின் வளிமண்டலத்தையும் கண்டறிந்தது.[9] இந்த வளிமண்டலக் கண்டுபிடிப்பு துல்லியமாக கனிமீடு புறக்கோளத்தின் கண்டுபிடிப்பு, அதுவரை கனிமீடைச் செயலற்ற நிலாவாகக் கருதிய அறிவியலாரின் கருத்தை மாற்றிக்கொள்ளச் செய்தது.[10] இவர் அந்தத் திட்டத்தின் இறுதி மேலாளராக இருந்தபோது 2003 இல் திட்டம் முடிவடைகையில் கலீலியோ விண்கலம் வியாழன் கோள் வளிமண்டலத்தில் நுழைவதை மேற்பார்வையிட்டார்.[1]

இவர் ஆராய்ச்சியாளராக விண்கற்களின் படிமலர்ச்சியும் அக இயற்பியலும், வியாழனும் அதன் நிலாக்களும், காந்த மண்டலங்கள், கண்ட்த்திட்டுகள், விண்வெளி மின்ம ஊடகம், சூரியக் காற்றின் விரிவும் தொடர்ச்சியின்மைகளும், வெள்ளிக் கோள் என பல புலங்களில் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். இவர் காரிக்கோளுக்கான காசினி-ஐகன்சு திட்டக் குழுவில் பணிபுரிந்துள்ளார்.[11] இவர் தனித்தும் பிறரோடு இணைந்தும் 14 ஆய்வுகளை வெளியிட்டுள்ளார்.[7]

இவர் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதவியல் புலங்களில் மகளிரும் சிறுபான்மையினரும் முன்னேற பெரிதும் பாடுபட்டவரும் ஆர்வம் மிக்க அறிவியல் பரப்புரையாளரும் ஆவார்.[1][9] இவர் 2015, ஏப்பிரல் மாதத்தில் சிகாகோவில் அமைந்த கொலம்பியா கல்லூரியில் "இடம்பெயர்தலின் இன்றியமையாமையும் சிறுவர் கல்வியின் புதிர்நிலையும்" எனும் தலைப்பில் உரையாற்றி சிறுவருக்கு அறிவியல் கல்வி அளிக்கும் அணுகுமுறையைச் செயல்படுத்திக் காட்டினார்.[12][13] இவர் இளம்பெண்களுக்கு அறிவியலில் ஆர்வம்பெற வழிகாட்டினார்.[1]

இவர் 2000 ஆம் ஆண்டில் இருந்து தன் இறப்புவரை நாசாவின் உரோசெட்ட விண்கலத் திட்ட அறிவியலாளராக ஐரோப்பிய விண்வெளி முகமையில் 67பி/சூரியுமோவ்-கெராசிமெங்கோ விண்கல் பற்றி ஆய்வு செய்து இதில் தரையிறங்கும் வரை பணியாற்றினார்.[1][9] இத்திட்டத்தில் இவர் வெப்பநிலை போன்ற தரவுகளைத் திரட்டும் 35 மில்லியன் டாலர் மதிப்புள்ள வட்டணைக் கலத்தின் மூன்று பகுதி கருவியமைப்புக்குப் பொறுப்பு வகித்தார்[2]. இவர் அந்தக் கலத்தின் நாசா ஆழ்வெளிக் கலமோட்டி, அதன் தடம்பின்பற்றும் வலையமைப்பை மேற்பார்வையிட்டார்.[14]

சொந்த வாழ்க்கை[தொகு]

இவர் அறிவியலில் மட்டுமன்றி எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் சிறுவர் அறிவியல் நூல்கள் பல எழுதியுள்ளார். இவற்றில் "முன் முனைவுச் சாளரங்கள்" எனும் தொடர்கள், "எந்த மலைகள் அனைத்து மலைகளிலும் மிகவும் பெரியன?" , "காலை விண்மீன் சாளரங்கள்" ஆகியன அடங்கும். இவர் அறிவியல் புனைகதைகளும் எழுதியுள்ளார். இவர் அமெரிக்கப் புனைவிய்ல் எழ்த்தாளர் கழக உறுப்பினரும் ஆவார்.[2][6] மேலும், இவர் பூப்பந்து விளையாட்டு பற்றியும் எழுதியுள்ளார். இவர் கடற்கரை அறிக்கை எனும் பூப்பந்து வலைப்பூவில் தொடர்ந்து பதிவுகள் செய்துவந்தார்.[9] இவர் குதிரையேற்றத்தில் பயணம் செய்வதில் மகிழ்ச்சி காண்பவர்.[9]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

இவர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஆண்டுக்கான பல்கலைக்கழக மனித உறவுக்கான பெண்மணி விருதைப் பெற்றார். இவர் 2002 இல் வளிமண்டல, கடல், விண்வெளி அறிவியல் புலங்களுக்கானமுன்னாள் மாணவர் தகைமை விருதைப் பெற்றார்.[5]

இவருக்கு 2003 இல், பொறியியல், தகவல் தொழில்நுட்ப இதழை வெளியிடும் வாழ்க்கைப்பணித் தொடர்பாடல் குழு நிறுவனம், பொறியியல், ஆராய்ச்சியில் பெண்களுக்கான எமரால்டு விருதைத் தேசிய அரிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கருத்தரங்கில் அளித்தது.[15]

இவரது தாய்மாமனான ஜைல்சு வில்லியம்சு 2007 இல் கிளாடியா அலெக்சாந்தர் கல்விநல்கையைப் பட்டப்படிப்பு மாணவருக்காக ஏற்பாடு செய்தார்.[5] இந்த நல்கை தேவைப்படும் மாணவருக்குக் காலநிலை, விண்வெளி, பொறியியல் பயில்பவருக்கு மிச்சிகன் பல்கலைக்கழகத்த்தைச் சார்ந்த மிச்சிகன் பொறியியல் கல்லூரியில் வழங்கப்படுகிறது.[16]

இவர் அமெரிக்கப் புவி இயற்பியல் ஒன்றியத்தின் உறுப்பினரும் அதன் பன்மைத் துணைக்குழுவின் தலைவரும் ஆவார்.[17] இவர் மகளிர் புவி இயற்பியலாளர் கழக உறுப்பினர் ஆவார். இக்கழகம் இவருக்கு ஆண்டின் பெண்மணியாக வரித்துக் கொண்டது.[7][9]

இவர் இறந்த பிறகு 2015 இல் ஐரோப்பிய விண்வெளி முகமை உரோசெட்டா செயல்திட்ட அறிவியலாளர்கள் அத்திட்ட இலக்கு வான்பொருளாகிய 67P/சூரியமோவ்-கெராசிமெங்கோ விண்கல்லின் கூறுபாடொன்றுக்கு இவரது பெயரை இட்டுள்ளனர், அதாவது இந்த விண்கல்லின் வாயில் போன்ற அமைப்புக் கூறுபாட்டுக்கு கி. அலெக்சாந்தர் வாயில் எனப் பெயரிட்டுள்ளனர்.[18]

இறப்பு[தொகு]

இவர் நெஞ்சகப் புற்றுடன் பத்தாண்டுகள் போராடி 2015 ஜூலை 11 இல் இறந்தார்.[1][2][5]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 Woo, Elaine (17 July 2015). "Claudia Alexander dies at 56; JPL researcher oversaw Galileo, Rosetta missions". The Los Angeles Times. http://www.latimes.com/local/obituaries/la-me-0719-claudia-alexander-20150718-story.html. பார்த்த நாள்: 21 July 2015. 
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 Roberts, Sam (19 July 2015). "Claudia Alexander, NASA Manager Who Led Jupiter Mission, Dies at 56". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2015/07/20/us/claudia-alexander-nasa-manager-who-led-jupiter-mission-dies-at-56.html. பார்த்த நாள்: 21 July 2015. 
 3. David, Leonard (21 September 2003). "Journey's End: Last Gasp for Galileo". SPACE.com இம் மூலத்தில் இருந்து 22 June 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100622063926/http://www.space.com/scienceastronomy/galileo_finale_030921.html. பார்த்த நாள்: 21 July 2015. 
 4. 4.0 4.1 4.2 4.3 4.4 Association for Women Geoscientists profile of Alexander பரணிடப்பட்டது 2017-10-30 at the வந்தவழி இயந்திரம்
 5. 5.0 5.1 5.2 5.3 Lyons, Allison (13 July 2015). "In memoriam: Claudia Alexander". University of Michigan இம் மூலத்தில் இருந்து 16 ஜூன் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190616121633/https://news.engin.umich.edu/2015/07/in-memoriam-claudia-alexander/. பார்த்த நாள்: 9 January 2018. 
 6. 6.0 6.1 "Claudia Alexander: Project Manager and Project Scientist | Rosetta". rosetta.jpl.nasa.gov (in ஆங்கிலம்). Archived from the original on 2019-04-22. பார்க்கப்பட்ட நாள் 2017-10-10.
 7. 7.0 7.1 7.2 7.3 "Dr. Claudia J. Alexander". Windows to the Universe. University Corporation for Atmospheric Research. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
 8. Pittsburgh Post-Gazette online, Scientist keeps an eye on comets by Dan Malerbo
 9. 9.0 9.1 9.2 9.3 9.4 9.5 "Claudia Alexander, Beloved NASA Project Scientist, Dies at 56". Space.com. https://www.space.com/30006-claudia-alexander-nasa-jupiter-mission-obituary.html. 
 10. "Claudia Alexander | People - NASA Solar System Exploration". NASA Solar System Exploration. பார்க்கப்பட்ட நாள் 2017-10-10.
 11. "Claudia Alexander | People - NASA Solar System Exploration". NASA Solar System Exploration. Archived from the original on 2017-01-02. பார்க்கப்பட்ட நாள் 2017-10-10.
 12. "TEDxColumbiaCollegeChicago | TED". www.ted.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-10-10.
 13. TEDx Talks (2015-12-03), The Compelling Nature of Locomotion | Dr. Claudia Alexander | TEDxColumbiaCollegeChicago, பார்க்கப்பட்ட நாள் 2017-10-10
 14. Netburn, Deborah (2014-11-10). "For Rosetta mission's scientists, the thrill is in the comet chase" (in en-US). Los Angeles Times. http://www.latimes.com/science/la-sci-c1-rosetta-alexander-20141110-story.html#page=1. 
 15. JPL press release, Research Scientist Receives National Minority Award பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
 16. "CLaSP Giving | Climate and Space Sciences and Engineering at the University of Michigan, College of Engineering". clasp.engin.umich.edu (in ஆங்கிலம்). Archived from the original on 2019-01-21. பார்க்கப்பட்ட நாள் 2017-10-10.
 17. "Claudia Alexander". Multicultural Environmental Leadership Development Initiative. Archived from the original on 7 September 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
 18. JPL Press Release, [1]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளாடியா_அலெக்சாந்தர்&oldid=3586636" இலிருந்து மீள்விக்கப்பட்டது