கிறிஸ்தோபர் அலெக்சாண்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிஸ்தோபர் அலெக்சாண்டர்
பிறப்பு4 அக்டோபர் 1936
வியன்னா
இறப்பு17 மார்ச் 2022 (அகவை 85)
Binsted
படிப்புமுனைவர் பட்டம்
பணிகட்டடக் கலைஞர், பல்கலைக்கழகப் பேராசிரியர், art theorist
விருதுகள்Global Award for Sustainable Architecture, honorary doctorate of Hasselt University

கலிபோர்னியா பல்கலைக் கழகம், பேர்க்லேயில் பேராசிரியராகவும் (professor-emeritus), ஒரு அனுமதி பெற்ற கட்டட ஒப்பந்தகாரராகவும், கட்டடக்கலைஞராகவும் விளங்குபவர் கிறிஸ்தோபர் அலெக்சாண்டர் (பிறப்பு: அக்டோபர் 4, 1936, வியன்னா, ஆஸ்திரியா). இவர் கலிபோர்னியா, ஜப்பான், மெக்சிக்கோ ஆகிய இடங்களில் கட்டிய கட்டிடங்களுக்காக அறியப்பட்டவர் எனினும், கட்டிடக்கலையில் இவரது கோட்பாட்டுப் பங்களிப்புகளுக்காகவே புகழ் பெற்றவர். சாரா இஷிகாவா (Sarah Ishikawa), முரே சில்வர்ஸ்டீன் (Murray Silverstein) ஆகியோருடன் இணைந்து, உருப்படிம மொழி (a pattern language) எனப்படும் கட்டிடக்கலை வடிவமைப்பு முறையொன்றை உருவாக்கினார். இது, எவரும் எந்த மட்டத்திலும் தங்களுக்கு வேண்டிய கட்டடங்களை வடிவமைக்க உதவுவதை இலக்காகக் கொண்டது. கட்டிடமொன்றின் பயனர்கள் தங்களுடைய தேவைகள் பற்றி மற்றெவரிலும் பார்க்கக் கூடுதலாக அறிவார்கள் என நம்பியதாலேயே இத்தகைய முயற்சியை அவர் மேற்கொண்டார். தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் அவர், கட்டிடக்கலைத் தொழிலை மேற்கொள்வதுடன், நகரத் திட்டமிடலிலும் ஆலோசகராகப் பணிபுரிந்து வருகிறார்.

வாழ்க்கை[தொகு]

ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் பிறந்த இவர், இங்கிலாந்திலேயே வளர்ந்தார். அறிவியல் துறையிலேயே இவரது கல்வி ஆரம்பமானது. கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டிக் கல்லூரியில் பயில்வதற்கான scholarship பெற்று வேதியியல், இயற்பியல் துறைகளிலும், பின்னர் கணிதத் துறையிலும் கல்வி பயின்றார். கட்டிடக்கலையில் இளமாணிப் பட்டமும், கணிதத்தில் முதுமாணிப் பட்டமும் பெற்றார். ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில், கட்டிடக்கலைத் துறையில் முனைவர் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். ஒரே காலகட்டத்தில் MIT இல் போக்குவரத்துக் கோட்பாடு, மற்றும் கணினி அறிவியல் ஆகிய துறைகளிலும், ஹார்வார்டில் அறிதிறன் (cognition) மற்றும் அறிதிற இயல்கள் (cognitive studies) தொடர்பாகவும் பணிபுரிந்தார். 1963 இல் பேர்கலேயில் பேராசிரியரானார். இவர் அங்கே 38 ஆண்டுகள் தொடர்ச்சியாகக் கற்பித்தலில் ஈடுபட்டிருந்தார். இவர் கட்டிடக்கலைத் துறையில் ஆற்றிய சேவைகளுக்காக 1996 இல், கலைகள் மற்றும் அறிவியல்களுக்கான அமெரிக்க அக்கடமி இவரை Fellow ஆகத் தேர்ந்தெடுத்து மரியாதை செய்தது. கணினி அறிவியல் துறையிலும், உருப்படிம மொழி இயக்கத்தின் தந்தை என இவர் கருதப்படுகின்றார்.