கிர்ச்சாஃப் விதி (வெப்ப இயக்கவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிர்ச்சாஃப் வெப்பக்கதிரியக்க விதி என்பது வெப்ப இயக்கவியல் சமநிலையில் உள்ள ஒரு பொருளின் குறிப்பிட்ட அலைநீளத்துக்கும் வெப்பக்கதிர்வீச்சு உமிழ்வுக்கும் உட்கவர்வுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் வகையில் குசுத்தாவ் கிர்ச்சாஃப் எனும் தொய்ச்சுலாந்து நாட்டு இயற்பியலாளரால் கண்டறியப்பட்ட ஒரு இயற்பியல் விதி.

இவ்விதியின்படி,

ஒரு குறிப்பிட்ட அலைநீளத்தில் மற்றும் குறிப்பிட்ட வெப்பநிலையில் கதிர்வீச்சு திறனுக்கும் உட்கவர் திறனுக்கும் உள்ள தகவு அனைத்துப் பொருள்களுக்கும் மாறிலியாகும். இந்த மாறிலியானது, அதே வெப்பநிலையில் உள்ள மற்றும் அதே அலைநீளத்திற்கான முழுக்கரும்பொருள் ஒன்றின் வெப்பக் கதிர் வீச்சுத் திறனுக்குச் சமமாகும்.[1] [2]

பயன்பாடுகள்[தொகு]

தெர்மாஸ் குடுவையில் பளபளப்பான வெள்ளிப்பூச்சு செய்யப்பட்ட சுவர்கள் இருப்பதால், அதில் வெப்பம் உட்கவர்தல் மற்றும் உமிழ்தல் ஆகியவை மிகக் குறைந்த அளவிலே நடைபெறுகின்றன. எனவே அக்குடுவையிலுள்ள பனிக்கட்டி உடனடியாக உருகுவதில்லை. அதிலுள்ள சூடான திரவங்கள் விரைவில் குளிர்வதில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kirchhoff, G. (1860). "Ueber das Verhältniss zwischen dem Emissionsvermögen und dem Absorptionsvermögen der Körper für Wärme and Licht". Annalen der Physik und Chemie 109 (2): 275–301. doi:10.1002/andp.18601850205. Bibcode: 1860AnP...185..275K. 
  2. Kirchhoff, G. (1860). "On the relation between the radiating and absorbing powers of different bodies for light and heat". Philosophical Magazine. Series 4 20: 1–21.