கிரேக் ஈ. வில்லியம்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரேக் ஈ. வில்லியம்சு
Craig E. Williams
தேசியம்அமெரிக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள்கிழக்கு கென்டக்கி பல்கலைக்கழகம்
அமைப்பு(கள்)அமெரிக்க வியட்நாம் படைவீரர்கள் அறக்கட்டளை
விருதுகள்கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2006)

கிரேக் ஈ. வில்லியம்சு (Craig E. Williams) கென்டக்கி மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அமெரிக்க இராணுவ வியட்நாம் போர் வீரராவார். அமெரிக்க வியட்நாம் படைவீரர் அறக்கட்டளையின் இணை நிறுவனராகவும் இருந்தார். அமெரிக்காவைச் சுற்றி சேமித்து வைக்கப்பட்டுள்ள ரசாயன ஆயுதங்களின் அழுகும் தேக்ககங்களை எரிக்கும் திட்டங்களை நிறுத்தும் முயற்சியில் பென்டகனை சமாதானப்படுத்திய முயற்சிகளுக்காக வில்லியம்சுக்கு 2006 ஆம் ஆண்டு கோல்டுமேன் சுற்றுச்சூழல் பரிசு வழங்கப்பட்டது. [1] இவரது முன்னெடுப்புகளால் கிட்டத்தட்ட 24000 டன் காலாவதியான இரசாயணப் பொருட்கள் எரிக்கப்படாமல் சேமிக்கப்பட்டன.

அமெரிக்கா அறக்கட்டளையின் வியட்நாம் படைவீரர்கள் அமைப்பும் பிற குழுக்களும் சேர்ந்து கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான பன்னாட்டுப் பிரச்சார இயக்கத்தை உருவாக்கியதற்காக , 1997 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. [1]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

வில்லியம்சு 1968-69 ஆண்டுகளில் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றினார். வியட்நாம் போரின் போது தென் வியட்நாமுக்கு அனுப்பப்பட்டார். இவர் 1978 ஆம் ஆண்டில் கிழக்கு கென்டக்கி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

1980 ஆம் ஆண்டில் அமெரிக்க வியட்நாம் படைவீரர் அறக்கட்டளையின் நிறுவனர்களில் ஒருவராக வில்லியம்சு இருந்தார், மேலும் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் பதினேழு ஆண்டுகள் பணியாற்றினார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Craig E. Williams". goldmanprize.org. Archived from the original on 2007-11-25. பார்க்கப்பட்ட நாள் 2007-10-25.
  2. "Veterans for America". veteransforamerica.org. Archived from the original on 2007-10-10. பார்க்கப்பட்ட நாள் 25 October 2007.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரேக்_ஈ._வில்லியம்சு&oldid=3197063" இலிருந்து மீள்விக்கப்பட்டது