கிருட்டிணராச சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கீழைநாட்டுவியல் நூலகம்
கட்டிடக்கலை மையம்
மாவட்ட நீதிமன்றத்தின் இரட்டை பூங்காக்கள்

கிருட்டிணராச சாலை (Krishnaraja Boulevard) என்பது இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் உள்ள மைசூர்நகரத்தின் ஒரு முக்கியமான சாலையாகும்.

அமைவிடம்[தொகு]

கிருட்டிணராச சாலை மைசூரின் தெற்குப் பகுதியில் சரசுவதிபுரம் மற்றும் பல்லால் வட்டம் ஆகியவற்றுக்கிடையே அமைந்துள்ளது. [1] [2] [3]

வரலாறு[தொகு]

மைசூர் நகரத்தின் வரலாற்று வீதிகளில் ஒன்றாக கிருட்டிணராச சாலையும் கருதப்படுகிறது. இது இருபுறமும் கம்பிவேலி அமைக்கப்பட்டு பூக்கும் மரங்கள் நடப்பட்டு பராமரிக்கபட்டு வருகிறது [4]

தற்போதைய நிலை[தொகு]

சமீபத்தில் இந்தச் சாலை அரசு அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டு, மக்கள் அதை வாகனங்களை நிறுத்தும் இடமாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். [5]

வரலாற்று கட்டிடங்கள்[தொகு]

கீழைநாட்டுவியல் நூலகம், மகாராஜாவின் கல்லூரி மற்றும் துணை ஆணையர் அலுவலகம், மாவட்ட நீதிமன்ற வளாகம், அர்சு உறைவிடப் பள்ளி, கட்டிடக்கலை கல்லூரி மற்றும் யுவராஜாவின் கல்லூரி போன்ற பல வரலாற்று கட்டிடங்கள் இந்த இரட்டைச் சாலையில் அமைந்துள்ளன. கிராபோர்டு ஹால் என்று அழைக்கப்படும் மைசூர் பல்கலைக்கழகத்தின் பிரதான அலுவலகமும் இங்கே அமைந்துள்ளது.

சாலையின் நீளம்[தொகு]

இந்தச் சாலை பல்லா வட்டத்திற்கு அருகிலுள்ள ஒரு பாலத்தின் சந்திப்பில் இருந்து வடக்குப் பக்கத்தில் அன்சூர் சாலையில் முடிவடைகிறது. பிரபல பாரம்பரிய நிபுணர் பேராசிரியர் என்.எஸ்.ரங்கராஜுவின் கூற்றுப்படி, நகர சபையால் அதன் பாரம்பரிய மதிப்புக்காக அடையாளம் காணப்பட்ட 15 சாலைகளில் இதுவும் ஒன்றாகும். [6]

பட தொகுப்பு[தொகு]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருட்டிணராச_சாலை&oldid=2994136" இருந்து மீள்விக்கப்பட்டது