கிரிகோரி கரோடெம்பிரல்
| மாண்புமிகு மார் கிரிகோரி கரோடெம்பிரல் (Gregory Karotemprel) ஆயர் | |
|---|---|
மார் கிரிகோரி கரோடெம்பிரல் | |
| மறைமாவட்டம் | ராஜ்கோட்டின் சிரிய-மலபார் கத்தோலிக்க எபார்ச்சி |
| ஆட்சி பீடம் | ராஜ்கோட் |
| முன்னிருந்தவர் | மார் யோனாசு தாலியத் |
| பின்வந்தவர் | மார் சோசு சித்தூபறம்பில் |
| திருப்பட்டங்கள் | |
| குருத்துவத் திருநிலைப்பாடு | 17 மே 1963 |
| ஆயர்நிலை திருப்பொழிவு | 24 ஏப்ரல் 1983 |
| கர்தினால் குழாம் அணி | ஆயர் |
| பிற தகவல்கள் | |
| பிறப்பு | 6 மே 1933
[1] செம்மலமட்டோம், கோட்டயம் மாவட்டம், கேரளம் |
| இறப்பு | 19 சூலை 2026 (அகவை 93) ராஜ்கோட், குஜராத், இந்தியா |
| குடியுரிமை | இந்தியன் |
| சமயம் | திருத்தூதர் தோமா கிறித்தவம் |
| இல்லம் | ஆயர் இல்லம், ராஜ்கோட் |
மார் கிரிகோரி கரோடெம்பிரல் (Gregory Karotemprel, 6 மே 1933 – 19 சூலை 2026) என்பவர் கிழக்குச் சிரிய கத்தோலிக்க ஆயரும் இறையியலாளரும் ஆவார்.[2] இவர் இராஜ்கோட்டின் சிரிய-மலபார் கத்தோலிக்க எபார்ச்சியின் ஓய்வு பெற்ற ஆயராவார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]கிரிகோரி கரோடெம்பிரல் 1933 மே 6 அன்று கோட்டயம் மாவட்டத்திலுள்ள செம்மலமட்டத்தில் பிறந்தார். இவர் கார்மெலிட்சு ஆப் மேரி இம்மாகுலேட் சபையில் சேர்ந்தார். பெங்களூரில் உள்ள தர்மராம் வித்யா சேக்சத்திரத்தில் தனது தத்துவ மற்றும் இறையியல் ஆய்வுகளை மேற்கொண்டார். இவர் 1963 மே 17 அன்று பாதிரியாராக நியமிக்கப்பட்டார். இவர் 1978-இல் சி.எம்.ஐ சபையின் எசு. எச் மாகாணத்தின் மாகாண தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாகாணசபையாக பணியாற்றிய போது, இராஜ்கோட்டின் ஆயராக நியமிக்கப்பட்டார்.[3]
இறப்பு
[தொகு]கிரிகோரி கரோடெம்பிரல் 2026 சூலை 19 அன்று குசராத்திலுள்ள இராஜ்கோட்டில் தனது 93-ஆவது அகவையில் காலமானார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Eparchy of Palai". Palaidiocese.com. Archived from the original on 2016-03-04. Retrieved 2016-02-21.
- ↑ "Syro Malabar Church Bishop ::Mar Gregory Karotemprel CMI Bishop Emeritus of Rajkot ::Rajkot Eparchy". Archived from the original on 2016-03-04. Retrieved 2016-02-21.
- ↑ "Rajkot Diocese". Rajkot Diocese. Retrieved 2016-02-21.
- ↑ "Bishop Mar Gregory Karotemprel, Bishop Emeritus of Rajkot, Dies at 93". Catholic Connect. 19 July 2026. Retrieved 19 July 2026.