உள்ளடக்கத்துக்குச் செல்

கிராமப்புற சமயப்பரப்புனர் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிராமப்புற சமயப்பரப்புனர் சங்கம்
Rural Home Missionary Association
உருவாக்கம்1942 (1942)
செயல் இயக்குநர்
இரான்Ron கிளாசென்
வலைத்தளம்rhma.org

கிராமப்புற சமயப்பரப்புனர் சங்கம் (The Rural Home Missionary Association) அமெரிக்காவில் உள்ள கிராமப்புற தேவாலய வலையமைப்பாகும்.[1] இவ்மைப்பு 1942 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[2]

புதிய தேவாலயங்களை நிறுவுவதற்கும், ஏற்கனவே உள்ள தேவாலயங்களை மாநாடுகள் மற்றும் பயிற்சிகள் மூலம் வலுப்படுத்தவும் முயற்சி செய்வது இச்சங்கத்தின் நோக்கமாகும்.[1] கிராமப்புற தேவாலய ஊழியத்தை விரிவுபடுத்துவதில் இவ்வமைப்பு ஒரு கருவியாக இருந்தது என்று கிளென் தாமன் என்பவர் கூறுகிறார்.[3]

2019 ஆம் ஆண்டு லைசு லென்சு என்பவர் எழுதிய "கடவுள் நிலம்" என்னும் புத்தகத்தில் கிராமப்புற சமயப்பரப்புனர் சங்கத்தின் பயிற்சி மாநாட்டில் கலந்து கொண்டதையும், பிரசங்கிக்கும் போது துப்பாக்கியை எடுத்துச் செல்லும்படி அறிவிக்கப்பட்டதையும் விவரிக்கிறார்.[4] இதில் உள்ள பாடத்திட்டம் ஆண்களை மையமாகக் கொண்டது என்றும் லென்சு வாதாடுகிறார். எதிர் பாலர் மீது பாற்கவர்ச்சி கொண்டவர்களாக இவ்வமைப்பின் ஆதரவு மத போதகர்கள் இருக்க வேண்டும் என்றும் லென்சு மேலும் குறிப்பிடுகிறார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Ferguson, Dave (4 February 2020). "10 Church Networking Models—Part 2". Outreach. https://outreachmagazine.com/features/church-planting/51512-10-church-networking-models-part-2.html. 
  2. "Our History". Rural Home Missionary Association. பார்க்கப்பட்ட நாள் 19 August 2022.
  3. Daman, Glenn (2018). The Forgotten Church: Why Rural Ministry Matters for Every Church in America. Moody Publishers. p. 236.
  4. Felicetti, Elizabeth (11 November 2019). "Why did Lyz Lenz’s church fail? Why do so many others?". Christian Century. https://www.christiancentury.org/review/books/why-did-lyz-lenz-s-church-fail-why-do-so-many-others. 
  5. Lyz Lenz (1 August 2019). "Trap Shooting with Pastors". Pacific Standard. https://psmag.com/ideas/lyz-lenz-god-land-excerpt. 

புற இணைப்புகள்

[தொகு]