கினு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கினு தீவு
Kihnu Island
தீவு
நாடு எசுத்தோனியா
பகுதி பர்னு மாவட்டம்
Municipality கினு பாரிஷ்
பரப்பு 16.38 கிமீ² (6.32 ச.மைல்)
Population 490 (2013)
Density 36.87 / கிமீ2 (95 / ச மை)
Timezone EET (UTC+2)
 - summer (DST) EEST (UTC+3)
Postal codes 88005
ரிகா வளைகுடாவில், கினு மற்றும் பிற தீவுகளும்
ரிகா வளைகுடாவில், கினு மற்றும் பிற தீவுகளும்
Website: www.kihnu.ee

கினு (Kihnu (சுவீடிய: [Kynö] error: {{lang}}: text has italic markup (உதவி)) என்பது பால்டிக் கடல் பகுதியில் உள்ள ஒரு தீவு ஆகும். இதன் பரப்பளவு 16.4 km2 (6.3 sq mi) இது ரிகா வளைகுடவில் மிகப்பெரிய தீவு ஆகும்.[1] மேலும் எசுத்தோனியாவின் ஏழாவது பெரிய தீவுமாகும். தீவின் நீளம 7 km (4.3 mi), அகலம் 3.3 km (2.1 mi), கடல் மட்டத்திலிருந்து தீவின் உயரமான பகுதி 8.9 மீட்டர்கள் (29.2 ft) ஆகும். இந்தத் தீவானது எஸ்டோனியாவின் பர்னு மாவட்டத்தைச் சேர்ந்தது. இது நாட்டின் சிறிய நகராட்சியாக 16.8 km2 (6.5 sq mi) பரப்பளவுடன் உள்ளது.

2007 ஆம் ஆண்டுக்கான குறிப்பின்படி, 604 பேர் கினுவில் வாழ்கின்றனர், இவர்களில் 69 பேர் துவக்கப்பள்ளி மாணவர்கள்.as of 2007. இங்கு நான்கு கிராமங்கள் உள்ளன அவை: லெம்ஸி, லினகூலா, ரூட்ஸிகுலா சேயர் ஆகியவை ஆகும். வானூர்தி வழியாக பானுவிலிருந்து 15 நிமிடங்களில் கினுவை அடைய முடியும் தீவுக்கு படகிலும் செல்ல இயலும். குளிர்காலத்தில் கடல் உறைந்திருக்கும் போது தீவிலிருந்து பனி மீது ஓட இயலும்.

பண்பாடு[தொகு]

இத்தீவு கைவினைஞர்களுக்குப் புகழ்பெற்றது. யுனெசுகோ 2003 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி கினுவின் கலாச்சாரம், முக்கியமாக திருமணச் சடங்குகளை ‘உலகப் பாரம்பரியச் சின்னமாக’ அங்கீகரித்திருக்கிறது. மான்ஜியா மற்றும் கினு ஆகிய பால்டிக் தீவுகள் தனித்த மரபுகள் கொண்ட சிறிய இனக் குழுவினரின் இருப்பிடமாக உள்ளது. தீவைச் சேர்ந்த ஆண்கள் காலம் காலமாகத் தொலைதூரத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார்கள். இதனால் தீவில் பெரும்பாலும் பெண்கள் மட்டுமே வசிக்கின்றனர். கினு தீவின் கைவினை, நடனம், விளையாட்டு, இசை ஆகியவை உள்ளடக்கிய தீவின் கலாச்சார பாரம்பரியத்தின் பாதுகாவலர்களாக பெண்கள் விளங்குகின்றனர். இங்குள்ள பெண்கள் மீன் பிடித்தல், துணி நெய்தல், காய்கறி, பழங்களை விளைவித்தல்., கால்நடைகள், பறவைகள் ஆகியவற்றை வளர்த்தல், குழந்தைகளை வளர்த்தல், கல்வி புகட்டுதல் ஆகிய பணிகளைச் செய்கின்றனர். இந்த பெண்கள் தினசரி அணியும் ஆடைகளை அவர்களே நெய்து, பாரம்பரிய முறைப்படி அணிகின்றனர்.[2] தீவின் மரபுகளில் இசை முக்கியத்துவம் வாய்ந்து மேலும் கைவினைப்பொருட்கள், சமய விழாக்கள் மற்றும் பிற கொண்டாட்டங்களையும் கொண்டிருக்கிறது. கினு மக்கள் எஸ்தோனியாவின் ஒரு வட்டாரவழக்கைப் பேசுகின்றனர், இது சில நேரங்களில் தனித்துவமான மொழியாகவும் கருதப்படுகிறது. மேலும் இதில் ஸ்வீடிஷ் மொழியின் பல கூறுகளும் உள்ளன.

கினுவின் படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. C.Michael Hogan. 2011. Gulf of Riga. Encyclopedia of Earth. Eds. P.Saundry & C.J.Cleveland. National Council for Science and the Environment. Washington DC.]
  2. "உலகின் கடைசி தாய்வழிச் சமூகம் தப்பிப் பிழைக்குமா?". செய்திக் கட்டுரை. தி இந்து தமிழ். 2017 நவம்பர் 30. 30 நவம்பர் 2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கினு&oldid=2751330" இருந்து மீள்விக்கப்பட்டது