கிங் ஆல்பர்ட் பூங்கா தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கிங் ஆல்பர்ட் பூங்கா தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வடக்குப் பகுதியில் கிங் ஆல்பர்ட் பூங்கா பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. நகர்மையம் வழித்தடத்தில் இது ஐந்தாவது தொடருந்துநிலையமாகும். இது பியூட்டி வோர்ல்ட் தொடருந்து நிலையம் மற்றும் ஆறாவது வழி தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்து நிலையத்தில் ஒன்றில் புக்கிட் பாஞ்சாங் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் எக்ஸ்போ தொடருந்து நிலையம் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.