கிஃபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கிஃபு

Gifu City Tower 43

கிஃபு ஒரு ஜப்பானில் உள்ள நகரமாகும்.இந்நகரம் ஜப்பானின் நிர்வாகத் தலைநகரமாக உள்ளது.இந்நகரம் ஜப்பானின் மையப்பகுதில் அமைந்துள்ளதால்,ஜப்பானிய வரலாற்றில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.சென்கோகு ஆட்சிக்காலத்தில்,பல்வேறுபடைத்தலைவர்கள் கிஃபுவை அடிப்படையாக வைத்து ஜப்பானை இணைக்கவும்,கட்டுப்படுத்தவும் முயன்றனர்.ஜப்பானின் இணைப்பிற்குப்பிறகும் கிஃபு நன்றாக வளர்ச்சி பெற்றது.கிஃபு,ஜப்பானின் நாகரிக மையங்களுள் ஒன்றாகத் திகழ்ந்தது.இது நவீன நகரமாவதற்கு முன்பு அட்சுமி மாவட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கியது.அஹ்டன்பிறகு அந்நாட்டு அரசு கிஃபுவை ஜப்பானின் மையநகரமாக அறிவித்தது.இந்நகரம் நாகாரா ஆற்றின் வண்டல் மண் பகுதியில் அமைந்துள்ளது.இந்நகரம் இயற்கை வளங்களால் சூழ்ந்திருப்பதால் விவசாயம் மற்றும் தொழிற்ச்சாலைகள் அமைக்கும் பொருட்டு மேன்மை பெற்று விளங்குகிறது.கின்கா மலை,இந்நகரத்தின் முக்கியச் ச்ன்னமாக விளங்குகிறது.இம்மலை அடர்ந்த காடுகளையும் கிஃபு அரண்மனையையும் தன்னகத்தே கொண்டுள்ளது.இந்த அரண்மனையை ஒத்ததாக இருக்கிறது.இங்கு வருடம் முழுவதிலும் விழாக்களும்,நிகழ்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.இரண்டு புகைவண்டித்தடங்கள் கிஃபுவை ஜப்பானுடன் அதாவது அதனுடைய தேசிய மற்றும் பன்னாட்டுப் போக்குவரத்துக் கட்டமைப்புடன் இணைக்கிறது.

ஜே ஆர் சென்ரல் டொகய்டோ முதன்மை வழித்தடம் இந்நகரத்தின் வழியாகச் செல்கிறது.இந்த வழித்தடம் ஜப்பானின் முக்கிய நகரங்களுள் ஒன்றான நகோயா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை இந்நகரத்துடன் இணைக்கிறது.இந்நகரத்திலிருந்து சிபு பன்னாட்டு விமான நிலையத்திற்கு நேரடியான புகைவண்டித்தடம் உள்ளது.உலக அளவில் நடக்கும் நிகழ்ச்சிகளை நடத்த எல்லாவிதமாக வசதிகளும் இங்கே இருக்கிறது.கிஃபு,இதனுடன் தொடர்புடைய 6 சகோதர நகரங்களுடன் நல்ல உறவு வைத்துள்ளது.ஜுலை2011 கணக்கெடுப்பின்படி,இந்நகரம் 4,12,895 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.ஒரு சதுர கிலோமீட்டருக்கு 2,000 என்ற மக்கள் அடர்த்தி விகிதத்தில் உள்ளது.இந்நகரத்தின் மொத்தப் பரப்பளவு 202.89 சதுர கிலோ மீட்டர்.

வரலாறு[தொகு]

இந்நகரத்திலுள்ள இரண்டு தொல்பொருள் ஆராய்ச்சி நடக்கும் இடங்களிலிருந்து முந்தைய வரலாற்றுக் காலத்திலேயே இந்நகரத்தில் மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் இருந்தன.ஏனென்றால் கிஃபு, வளமான நோபி படுகையில் அமைந்துள்ளது.தி யோமஜி மற்றும் கொடாசுகா பகுதிகள் பெரிய புதைகுவியல்களை உருவாக்கின.இவை பிந்தைய யயோய் காலத்தின் நிறைவுச் சின்னமாக விளங்குகிறது.இக்காலத்தில்தான் ஜப்பானில் முதன் முதலில் நெல் பயிரிடப்பெற்றது.நாகரீகம் வரை வளர வளர நிலையான குடிமக்கள் தோன்றினர்.இறுதியாக இனொகுசி என்ற கிராமம் தோற்றுவிக்கப்பட்டது.இந்த கிராமம் நாகரீக நகரமான கிஃபுவாக மாறியது.

சமுதாயநிலைப்புள்ளி விவரம்[தொகு]

Population by year
Year Population[1]
2009 422,061
2000 402,751
1990 410,324
1980 410,257
1970 385,727
1960 304,492
1950 211,845
1940 172,340
1930 90,112
1920 62,713
1910 42,916
1889 25,750

சகோதர நகரங்கள்[தொகு]

நட்பு நாடுகள்[தொகு]

  • சீனாவின் கொடி Hangzhou, சீனா (since February 21, 1979)

மேற்க்கோள்கள்[தொகு]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; outline07 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வெளியிணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:Gifu

வார்ப்புரு:Metropolitan cities of Japan

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிஃபு&oldid=2437606" இருந்து மீள்விக்கப்பட்டது