கா. மு. ஷெரீப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கா. மு. ஷெரீப்
பிறப்புகாதர்சா இராவுத்தர் மு. செரீப்
(1914-08-11)11 ஆகத்து 1914
அபிவிருத்தீஸ்வரம், திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு
இறப்பு7 சூலை 1994(1994-07-07) (அகவை 79)
பணிகவிஞர்

கவி கா. மு. ஷெரீப் (ஆகஸ்ட் 11, 1914 - ஜூலை 7, 1994) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

கவி கா.மு.ஷெரீப் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி அருகில் உள்ள அபிவிருத்தீஸ்வரம் என்ற ஊரில் காதர்சா ராவுத்தர் என்பவருக்கும், முகம்மது இபுறாகீப்பாத்தம்மாள் என்பவருக்கும் ஒரே பிள்ளையாகப் பிறந்தார்.[1]

இவர் ஒளி, தமிழ் முழக்கம், சாட்டை, ஆகிய ஏடுகளுக்கு ஆசிரியராக இருந்தார்.[2].

எழுதியுள்ள நூல்கள்[தொகு]

சிறுகதை நூல்கள் 3, நவீனம் 3, நாடக நூல்கள் 4, இலக்கியக் கட்டுரை நூல் 1, அறிவுரைக் கடித நூல் 1, பயண நூல் 1, கவிதை நூற்கள் 7, குறுங் காவியம் 1, அரசியல் நூல் 3, உரை நூல் சீறாப்புராணம் - 8 பாகங்கள் எனப் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

சிறுகதைகள்[தொகு]

  1. காதல் வேண்டாம் – கதைகள்
  2. காதலும் கடமையும் – கதைகள்

கவிதைகள்[தொகு]

  1. ஒளி - முதற் கவிதை நூல் . (1946)
  2. இன்றைய சமுதாயம் (கவிதை)
  3. மச்சகந்தி (குறுங்காவியம்)
  4. ஆன்மகீதம் (கவிதை)
  5. கவி கா.மு.ஷெரீப் கவிதைகள்

நாடகம்[தொகு]

  1. புலவர் புகழேந்தி (இலக்கிய நாடகம்)
  2. புது யுகம் – நாடக நூல்

பிற நூல்கள்[தொகு]

  1. தஞ்சை இளவரசி – சீதக்காதி நூல் வெளியீட்டகம்
  2. நல்ல மனைவி – சீதக்காதி நூல் வெளியீட்டகம்
  3. வள்ளல் சீதக்காதி வரலாறு – சீதக்காதி நூல் வெளியீட்டகம்
  4. விதியை வெல்வோம் – சீதக்காதி நூல் வெளியீட்டகம்
  5. கண்ணகியின் கனவு (இலக்கியக் கட்டுரைகள்)
  6. தமிழரின் சமயநெறி
  7. விபீஷணன் வெளியேற்றம்
  8. வீரன் செண்பகராமன் வரலாறு
  9. களப்பாட்டு
  10. கவி கா.மு.ஷெரீப் தலையங்கங்கள் (1948 முதல் 1956 வரை)
  11. பொது சிவில் சட்டம் பொருந்துமா?
  12. தமிழரசுக் கழகம் ஏன் வந்தது? என்ன சொல்கிறது?
  13. தமிழரசில் முஸ்லிம்கள் – கட்டுரை
  14. இலக்கியத்திலும் பித்தலாட்டமா? – கட்டுரை
  15. முஸ்லீம் லீக் தேவைதானா? – கட்டுரை
  16. தி.மு.க. நாடாளுமா? – கட்டுரை
  17. கலைஞர் 63

இஸ்லாமிய நூல்கள்[தொகு]

  1. பல்கீஸ் நாச்சியார் காவியம்
  2. நபி தம் பேரர்
  3. ஆயிஷா நாச்சியார் பிள்ளைத்தமிழ்
  4. இஸ்லாமும் ஜீவகாருண்யமும்
  5. கிழக்கிலுள்ள பிறைக்கொடி நாடு
  6. இறைவனுக்காக வாழ்வது எப்படி? – சீதக்காதி நூல் வெளியீட்டகம்
  7. இறையருள் வேட்டல்
  8. பத்ர் போரின் பின் விளைவுகள்
  9. சீறாப்புராணம் சொற்பொழிவு
  10. இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா? – சீதக்காதி நூல் வெளியீட்டகம்

திரைப்படப் பாடல்கள்[தொகு]

  • ”ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே…!”
  • ”இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்திலெல்லாம் விருப்புடன் தேடிடுவார் ஞானத்தங்கமே” ([[பணம் பந்தியிலே
  • அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை – அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை, மண்ணில் மனிதரில்லை - அன்னையின் ஆணை
  • சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா !- டவுன் பஸ்
  • ஏரிக்கரை கரையின் மேலே - முதலாளி 
  • வானில்முழுமதியைக்கண்டேன் - சிவகாமி 
  • உலவும் தென்றல் காற்றினிலே - மந்திரிகுமாரி 
  • வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் - நான் பெற்ற செல்வம் 
  • ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா ? - மக்களைப் பெற்ற மகராசி
  • பணம் பந்தியிலே குணம் குப்பையிலே -

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._மு._ஷெரீப்&oldid=3785053" இலிருந்து மீள்விக்கப்பட்டது