காவு தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிஜி தீவுகள்

காவு (Gau, ஒலிப்பு [ŋau]) என்பது பிஜியின் லொமாய்விட்டி தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறு தீவு. 18.00°தெ மற்றும் 179.30°கி அமைந்துள்ள இத்தீவின் பரப்பளவு 136.1 சதுர கிலோமீட்டர்கள். இதன் மொத்த கரைப்பகுதி 66.3 கிலோமீட்டர்கள் நீளமானது. இதன் மிக அதிகமான உயரம் 738 மீட்டர்கள். இத்தீவின் தெற்கே லோவு என்ற இடத்தில் ஒரு விமான ஓடுபாதை உள்ளது. பிஜியின் நோசோரி பன்னாட்டு விமானநிலையத்தில் இருந்து விமானங்கள் இங்கு வந்திறங்குகின்றன.


காவுவின் மேற்குக் கரைப்பகுதியில் உள்ள நவியாவியா கடற்கரையில் கடல் ஆய்வு நிலையம் ஒன்று அமைந்துள்ளது. 2005 ஆம் ஆண்டில் இப்பன்னாட்டு ஆய்வு நிறுவனம் அமைக்கப்பட்டது

இத்தீவில் பிஜி பெட்ரெல் எனப்படும் மிக அரிதான கடற்பறவையினம் தரையிறங்குவதுண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காவு_தீவு&oldid=1353917" இருந்து மீள்விக்கப்பட்டது