கால்சியம் போரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கால்சியம் போரேட்டு
இனங்காட்டிகள்
12007-56-6 N
ChemSpider 118685 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 134660
பண்புகள்
Ca3(BO3)2
வாய்ப்பாட்டு எடை 237.852 கி/மோல்
தோற்றம் நீலம் கலந்த வெண்மை படிகங்கள்
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
Lethal dose or concentration (LD, LC):
590 மி.கி/கி.கி (வாய்வழி,சுண்டெலி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

கால்சியம் போரேட்டு (Calcium borate) என்பது (Ca3(BO3)2) என்ற மூலகூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். நீலம் கலந்த வெண்மை நிறத்தில் தெளிவான கட்டமைப்புடன் இச்சேர்மம் காணப்படுகிறது. கால்சியம் உலோகத்துடன் போரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் கால்சியம் போரேட்டு வீழ்படிவாக உருவாகிறது. நீரேறிய வடிவ கால்சியம் போரேட்டு இயற்கையில் கோலிமேனைட்டு, நோபிலைட்டு, பிரைசையிட்டு போன்ற கனிமங்களாகத் தோன்றுகிறது.

உயர் வெப்பநிலையில் அறுகோண போரான் நைட்ரைடை பிணைக்கப் பயன்படும் தூள் உலோகவியலில் இது பயன்படுகிறது. எப்பாக்சி அச்சு வார்ப்பு சேர்மங்களில் சுடர் தணிப்பியாகவும், சில வகையான பீங்கான் மெருகூட்டலில் பீங்கான் இளக்கியாகவும், தீங்கிழைக்கும் கழிவுப்பொருள் மேலாண்மையில் செயல்திறமிக்க தன்னடைப்பு பிணைப்பியாகவும் [1], பூச்சியெதிர்ப்பு பாலிசிடைரின் கூட்டுப்பொருளாகவும் [2] , உரத் தயாரிப்பிலும் போரான் கண்ணாடிகள் உற்பத்தியிலும் கால்சியம் போரேட்டு பயன்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சியம்_போரேட்டு&oldid=2635407" இருந்து மீள்விக்கப்பட்டது