உள்ளடக்கத்துக்குச் செல்

கால்சியம் டார்ட்டரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்சியம் டார்ட்டரேட்டு
Calcium tartrate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,3-ஈரைதராக்சிபியூட்டேன்டையாயிக் அமில கால்சியம் உப்பு
இனங்காட்டிகள்
3164-34-9 (நீரிலி) Y
5892-21-7 (நான்கு நீரேற்று)
ChemSpider 10606089 Y
EC number 221-621-5
InChI
  • InChI=1S/C4H6O6.Ca/c5-1(3(7)8)2(6)4(9)10;/h1-2,5-6H,(H,7,8)(H,9,10);/q;+2/p-2 Y
    Key: GUPPESBEIQALOS-UHFFFAOYSA-L Y
  • InChI=1/C4H6O6.Ca/c5-1(3(7)8)2(6)4(9)10;/h1-2,5-6H,(H,7,8)(H,9,10);/q;+2/p-2
    Key: GUPPESBEIQALOS-NUQVWONBAP
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13725892
  • [Ca+2].O=C([O-])C(O)C(O)C([O-])=O
UNII O6I5B26XA7 Y
பண்புகள்
CaC4H4O6
வாய்ப்பாட்டு எடை 190.16484 கி/மோல் (நீரிலி)
260.21 கி/மோல் (நான்கு நீரேற்று)
தோற்றம் நீர் உறிஞ்சும் திறன் வெண்மையான தூள்
அல்லது நிறமற்ற படிகங்கள்
அடர்த்தி 1.817 கி/செ.மீ3 (நான்கு நீரேற்று)
உருகுநிலை நான்கு நீரேற்று 160 °செல்சியசு வெப்பநிலையில் சிதையும்
நீரிலி 650 °செல்சியசு வெப்பநிலையில் சிதையும்
0.037 கி/100 மி.லி (0 °செல்சியசு) 0.2 கி/100 மி.லி (85 °செல்சியசு)
கட்டமைப்பு
படிக அமைப்பு d அல்லது l சாய்சதுரம்
dl முச்சாய்வு
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Calcium tartrate
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Y verify (இது Y☒N ?)

கால்சியம் டார்ட்டரேட்டு (Calcium tartrate) என்பது CaC4H4O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கால்சியம் எல்-டார்ட்டரேட்டு என்ற பெயராலும் இது அறியப்படுகிறது. ஒயின் எனப்படும் மது தயாரிக்கும் தொழில்துறையில் உடன் விளைபொருளாக கால்சியம் டார்ட்டரேட்டு உருவாகிறது. மது தயாரிப்பின் நொதித்தல் முறையில் உருவாகும் கசடிலிருந்து இதை தயாரிக்கிறார்கள்.[1][2][3] இது எல்-டார்டாரிக் அமிலத்தின் கால்சியம் உப்பு என்று இது விவரிக்கப்படுகிறது. எல்-டார்டாரிக் அமிலம் திராட்சையில் பொதுவாகக் காணப்படும் அமிலமாகும். வெப்பநிலை குறைய குறைய இதன் கரைதிறனும் குறைகிறது. இதன் விளைவாக வெண்மையான (சிவப்பு ஒயினில் பெரும்பாலும் சிவப்பு) படிகக் கொத்துகள் வீழ்படிவாக உருவாகின்றன. ஐரோப்பிய ஒன்றிய எண் ஐ354 என்ற எண்ணால் கால்சியம் டார்ட்டரேட்டு அடையாளப்படுத்தப்படுகிறது. இச்சேர்மம் உணவுப் பாதுகாப்பு மற்றும் அமிலத்தன்மை சீராக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. டார்டாரிக் அமிலத்தைப் போலவே, கால்சியம் டார்ட்ரேட்டிலும் இரண்டு சமச்சீரற்ற கார்பன்கள் உள்ளன. எனவே இது இரண்டு தோற்றுரு கவியாப் பண்பு கொண்ட இரண்டு மாற்றியங்களையும் ஒரு மீசோ-வடிவ மாற்றியத்தையும் கொண்டுள்ளது. உயிரியல் தோற்றத்தின் பெரும்பாலான கால்சியம் டார்ட்ரேட்டு தோற்றுரு கவியாப் பண்பு கொண்ட இடஞ்சுழி (–) மாற்றியம் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Zoecklein, Bruce; Fugelsang, Kenneth C.; Gump, Barry H.; Nury, Fred S. (2013-11-09). Wine Analysis and Production (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 228. ISBN 978-1-4757-6967-8.
  2. Roeber, Eugene Franz; Parmelee, Howard Coon (1915). Metallurgical & Chemical Engineering (in ஆங்கிலம்). Electrochemical Publishing Company. p. 616.
  3. Ribéreau-Gayon, Pascal; Glories, Yves; Maujean, Alain; Dubourdieu, Denis (2006-05-01). Handbook of Enology, Volume 2: The Chemistry of Wine - Stabilization and Treatments (in ஆங்கிலம்). John Wiley & Sons. pp. 39–40. ISBN 978-0-470-01038-9.