காலுறை பொம்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலுறை பொம்மை

காலுறை பொம்மை என்பது காலுறையைக் கொண்டு செய்யப்படும் ஒரு பொம்மையாகும். இப் பொம்மைகள் குழந்தைகளுக்கு வித்தை காட்டப் பயன்படுகின்றன. வித்தையாளர் பொம்மைக்குள் கையை நுழைத்து அசைத்தவாறே கதைக்கும் போது பொம்மை கதைப்பது போன்றிருக்கும்.

வித்தையாளர் மறைந்திருந்து பொம்மை அணிந்த கையை மட்டும் வெளிக்காட்டுவார். அல்லது வித்தையாளரும் பொம்மையும் கதைப்பது போல நாடகம் அமையும். இதனைக் குரல் எறியவல்ல வித்தையாளர்கள் செய்யும்போது உண்மையாகவே வித்தையாளரும் பொம்மையும் கதைப்பது போல தோன்றும்.

காலுறை பொம்மைகள் காலுறைகளையோ அதனையொத்த வேறு துணியையோ கொண்டு செய்யப்படுகின்றன. பழைய காலுறைகளைப் பயன்படுத்தி இவற்றை உருவாக்க முடியுமெனினும் பெரும்பாலும் புதிய காலுறைகள் பயன்படுகின்றன. வேறு பொருட்களை ஒட்டுவதன்மூலம் பொம்மைக்கு உருவம் வழங்கலாம். கண்களாகப் பொத்தான்களையும் தலைமயிராகக் கயிறையும் ஒட்டலாம்.

இந்த நாடக விளையாட்டு பெரும்பாலும் குழந்தைகளுக்கு பள்ளியில் செய்துக்காட்டப்படுகிறது. ஆரம்பப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு இது கற்பிக்கப்படுவதுமுண்டு. தொலைக்காட்சிகளிலும் காலுறை பொம்மை நாடகங்கள் ஒளிபரப்பாகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காலுறை_பொம்மை&oldid=3239758" இலிருந்து மீள்விக்கப்பட்டது