காலக்கோடு
ஒரு காலக்கோடு (timeline) என்பது நிகழ்வுகளின் பட்டியலைக் காலவரிசைப்படி விவரிக்கும் ஒரு திட்டமாகும்.[1] இது பொதுவாக ஒரு வரைபட வடிவமைப்பு. ஒரு நீண்ட பட்டையில் நாட்களுடன் அவற்றுக்கு இணையாக நிகழ்வுகளைக் காட்டுகிறது.
காட்டும் காலத்தையும் அதற்கான தரவு விவரங்களையும் பொறுத்துத் தகுந்த அளவுதிட்டத்தைக் கொண்டு காலக்கோடு அமைக்கப்படுகிறது. அளவுதிட்டத்தின் ஓரலகு என்பது காலத்தின் அளவாக இருக்கும். காலக்கோட்டில் தரப்பட்டுள்ள நிகழ்வுகளைப் பொறுத்து கால அளவு அமையும். பரிணாம வளர்ச்சியின் காலக்கோட்டில் அளவுதிட்டத்தின் காலவளவு மில்லியன் வருடங்களாகவும் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் காலக்கோட்டில் நிமிடங்களாகவும் இருக்கும்.[2] காலக்கோடுகள், உரைக் காலக்கோடுகளாகவோ அல்லது எண் காலக்கோடுகளாகவோ அமைகின்றன. காலக்கோடுகள் பெரும்பாலும் படமாகவும், வரைந்தும் பயன்படுத்தப்பட்டன. காலக்கோடுகள் தற்பொழுது கணினி மென்பொருள் உதவியுடன் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.
மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் வரலாற்று நிகழ்வுகள் மற்றும் அதன் போக்குகள் பற்றி அறிந்து கொள்ள காலக்கோடுகள் உதவுகின்றன. காலக்கோடானது குறிப்பிட்ட அளவில், நிகழ்வுகள் மற்றும் காலங்களுக்கு இடையே உள்ள இடைவெளி கால அளவினையும் காலத்தொடர்ச்சியினையும் அறிய உதவுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Grafton, Anthony; Rosenberg, Daniel (2010), Cartographies of Time: A History of the Timeline, Princeton Architectural Press, p. 272, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56898-763-7
- ↑ plarson (2016-09-01). "Anomaly Updates" (in en). SpaceX இம் மூலத்தில் இருந்து February 16, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170216160231/http://www.spacex.com/news/2016/09/01/anomaly-updates.
- ↑ DeCoito, Isha; Vacca, Stefano (2020-10-30). "The Case for Digital Timelines in Teaching and Teacher Education" (in en). International Journal of e-Learning & Distance Education / Revue internationale du e-learning et la formation à distance 35 (1). பன்னாட்டுத் தர தொடர் எண்:1916-6818. http://www.ijede.ca/index.php/jde/article/view/1171. பார்த்த நாள்: March 11, 2022.