காற்றுக் கிண்கிணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு உலோக காற்றுக் கிண்கிணி

காற்றுக் கிண்கிணி அல்லது காற்றிசைச்சரம் (Wind chimes) என்பது உலோகம், மரம், மூங்கில் எனப் பலவிதமான பொருள்கள்கொண்டு செய்யப்படும் ஒரு தாள இசைக்கருவி ஆகும். இந்த மணிகள் தயாரிக்கும் பொருள்கள் பெரும்பாலும் குழாய் வடிவில் இருக்கும் அதன் நடுவில் மணி தொடங்கவிடப்பட்டிருக்கும். காற்றின் அசைவில் மணியில் உலோகம் மோதி இனிமையான ஓசை உண்டாகும். இவை பெருப்பாலும் வீட்டின் வரவேற்பறையில் அல்லது வீட்டின் வெளியில் அலங்காரத் தோரணம்போல மாட்டிவைப்பார்கள். 

வரலாறு[தொகு]

பிரித்தனிய அருங்காட்சியகத்தில் உள்ள கி. பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமானியர் கால வெண்கல காற்றுக் கிண்கிணி.

ரோமனியப் பண்பாட்டில் காற்றுக் கிண்கிணிகளானது வழக்கமாக வெண்கலத்தால் உருவாக்கப்பட்டன. டின்டினிபூலூம் என்று அழைக்கப்பட்ட, இவை தோட்டங்கள், முற்றங்கள் மற்றும் துறைமுகங்களில் தொங்கிக் கொண்டிருந்தன. இந்த மணிகளை நல்வாய்ப்பை வழங்குவனவாகவும் மற்றும் தீமையான கண்ணூறுக்கு[1] எதிரான அழகு சின்னமாகவும் இருந்தது. இந்த காற்றுக் கிண்கிணிகளின் வடிவமானது சிங்கத்தைச் சித்தரிக்கும் உருவமைப்பில், இறக்கை உடைய சிங்கமாக பாதம் வால் ஆகியவற்றோடு அமைக்கப்பட்டன. இந்த கூடுதல் அமைப்புகள் அதன் பாதுகாப்பு ஆற்றலை அதிகரித்ததாக நம்பப்பட்டது.[2] இந்தியாவிலும் கி.மு.2 ஆம் நூற்றாண்டிலிருந்து இது பயன்பாட்டில் இருந்துள்ளது. ஆனால் இந்த மணிகளுக்கு கலாச்சார ரீதியான முக்கியத்துவத்தை சீனர்களே அளித்தனர். இன்றைக்குப் பயன்பாட்டிலுள்ள ஓசை எழுப்பும் கிண்கிணிகளின் வடிவத்துக்கு முன்மாதிரியாக உள்ளவை சீன வடிவம்தான்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காற்றுக்_கிண்கிணி&oldid=3576938" இருந்து மீள்விக்கப்பட்டது