காரியசு ஆலசன் முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காரியசு ஆலசன் முறை (Carius halogen method) என்பது வேதிப்பொருட்களில் உள்ள ஆலசன்களின் அளவை உறுதி செய்வதற்குப் பயன்படும் ஒரு பகுப்பாய்வு வேதியியல் முறையாகும்.[1]

நிறை அறிந்த ஓர் கரிமச் சேர்மத்தை கார்சியசு வகைக் கடின கண்ணாடிக் குழாயில் எடுத்துக் கொண்டு அதனுடன் புகையும் நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்து வெள்ளி நைட்ரேட்டு முன்னிலையில் ஓர் உலையில் வைத்து சூடுபடுத்தப்படுகிறது. சேர்மத்திலுள்ள கார்பனும் ஐதரசனும் ஆக்சிசனேற்றம் அடைந்து கார்பனீராக்சைடாகவும் தண்ணீராகவும் வெளியேறுகின்றன. சேர்மத்திலிருக்கும் ஆலசன் வெள்ளி ஆலைடாக உருவாகிறது. விளைபொருளை வடிகட்டி தூய்மையாக்கிர்த்தி நிறை காணப்படுகிறது..

இதற்குச் சமமான முறையில் வேதிச்சேர்மத்திலுள்ள கந்தகத்தையும் உறுதி செய்ய முடியும். ஆனால் இம்முறையில் வெள்ளி நைட்ரேட்டு சேர்க்கப்படுவதில்லை. கந்தக அமில இடைவிளை பொருள் உருவாகிறது. பேரியம் குளோரைடைச் சேர்ப்பதால் புகையும் நைட்ரிக் அமிலம் கந்தகத்துடன் வினைபுரிந்து கரையாத பேரியம் சல்பேட்டு உருவாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Julius B. Cohen Practical Organic Chemistry 1910 Link to online text
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரியசு_ஆலசன்_முறை&oldid=2748151" இருந்து மீள்விக்கப்பட்டது