உள்ளடக்கத்துக்குச் செல்

காரல் போவாலியசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காரல் எரிக் அலெக்சாண்டர் போவாலியசு
Carl Erik Alexander Bovallius
பிறப்பு(1849-07-31)31 சூலை 1849
சிடாக்கோம், சுவீடன்
இறப்பு8 நவம்பர் 1907(1907-11-08) (அகவை 58)
சியார்ச்சு டவுன், கயானா
பணிஉயிரியலாளர், தொல்லியல் அறிஞர்

காரல் எரிக் அலெக்சாண்டர் போவாலியசு (Carl Erik Alexander Bovallius) சுவீடன் நாட்டைச் ஓர் உயிரியலாளர் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆவார்.[1][2] இவர் 1849 ஆம் ஆண்டு சூலை மாதம் 31 ஆம் நாள் பிறந்தார். காரல் எரிக் அலெக்சாண்டர் போவாலியசு 1907 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் நாள் இறந்தார்.

வாழ்க்கை

[தொகு]

போவாலியசு 1868 ஆம் ஆண்டு உப்சாலாவில் மாணவராகச் சேர்ந்து 1875 ஆம் ஆன்டு முனைவர் பட்டம் பெற்றார். போவாலியசு, அறிவியல் நோக்கங்களுக்காக, சுவீடன் மற்றும் நோர்வே கடற்கரை பகுதிகளில் பயணம் மேற்கொண்டார்.

1881-83 ஆம் ஆண்டுகளில் இவர் இலத்தீன் அமெரிக்காவில் விலங்கியல் மற்றும் இனவியல் ஆய்வுகளை மேற்கொண்டார், 1890 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இவர் தன்து நாட்டுக்குத் திரும்பினார்.

1881 ஆம் ஆண்டு பயணத்தைத் தொடங்கிய காரல் போவாலியசு பண்டைய இடங்களைத் தேடியடைந்து மத்திய அமெரிக்காவையும் குறிப்பாக நிகரகுவாவையும் ஆராய்ந்தார். நிகாரகுவாவின் தொல்லியல் தளங்களான ஒமெட்டிப் மற்றும் சாபாடெரா போன்ற பகுதிகளையும் உள்ளூர் பழங்குடியினரின் இனவரைவியலில் ஆய்வுகளையும் மேற்கொண்டார்.

இவரது நினைவாக ரினோபோத்ரியம் போவல்லி என்று ஒரு பாம்பு வகைக்கு பெயரிடப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Carl Bowallius". Nationalencyklopedin. அணுகப்பட்டது 29 October 2010.  (subscription required)
  2. "Bowallius, Karl Erik Alexander". Nordisk Familjebok (2) 3. (1905). 1378–1379. அணுகப்பட்டது 29 October 2010. 
  3. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. ("Bovall", p. 36).
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரல்_போவாலியசு&oldid=3861653" இலிருந்து மீள்விக்கப்பட்டது