காரகோரம் வனவிலங்கு சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காரகோரம் வனவிலங்கு சரணாலயம் (Karakoram Wildlife Sanctuary) சம்முகாசுமீரின் லே மாவட்டத்தில் காணப்படும் காரகோரம் மலைத்தொடரில் உள்ள மிக உயர்ந்த வனவிலங்கு சரணாலயமாகும். சிரு அல்லது திபெத்திய மான் கூட்டம் இடம்பெயர்ந்து செல்லும் இந்தியாவிலுள்ள முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த வனவிலங்கு சரணாலயம் பேராசிரியர் சந்திர பிரகாசு கலாவால் விரிவாக கணக்கெடுக்கப்பட்டது. மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள் உட்பட தாவர வகைகளின் பரவல், சுற்றுச்சூழல் மாறல் விகிதம், தாவரங்கள், விலங்குகள் முதலியவற்ரின் இயற்கைவாழிடம் தொடர்பானவை பேராசிரியரின் கணக்கெடுப்பில் முக்கியத்துவம் பெற்றிருந்தன.

குளிர் பாலைவனப் பகுதியாக இருப்பதால் காரகோரம் வனவிலங்கு சரணாலயத்தில் தாவரங்கள் பரவலாகச் சிதறி அடர்த்தியற்று காணப்படுகின்றன. எனினும், விளிம்புநிலை சூழல் மாற்றங்களால் சில குறிப்பிடத்தகுந்த சிறந்த பண்புகளை இங்குள்ள தாவரங்கள் பெற்றுள்ளன. உயர் மருத்துவ குணங்கள் கொண்ட தாவரங்கள் பல இச்சரணாலயத்தில் இடம்பெற்றிருந்தன. பதினைந்து அரிய வகை மற்றும் அழிந்துபோகும் நிலையிலுள்ள தாவர இனங்களை பேராசியர் கலா இச்சரணாலயத்தில் கண்டறிந்தார். இவை வெவெறு வாழிட சூழலில் பரவலாக ஆங்காங்கே வளர்ந்திருந்தன. ஆர்னெபியா யுகுரோமா, பெர்கெனியா சிடிராச்செய், எபித்ரா கெராடியனா, ஐயோசிமசு நைகர் என்பவை இச்சரணாலயத்தில் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள மருத்துவரீதியான முக்கியமான தாவரங்கள் ஆகும் [1][2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Kala, Chandra Prakash 2000. Status and conservation of rare and endangered medicinal plants in the Indian trans-Himalaya. Biological Conservation, 93: 371-379.
  2. Kala, Chandra Prakash 2005. Indigenous uses, population density, and conservation of threatened medicinal plants in protected areas of the Indian Himalayas. Conservation Biology, 19 (2): 368-378.