காமதேனு வாகனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காமதேனு வாகனம்
உரிய கடவுள்: அம்மன்

காமதேனு வாகனம் என்பது சிவாலயங்களில் அம்மனின் வாகனமாக உள்ளது. கோலோகம் என்ற தனி உலகத்தில் காமதேனு வசிப்பதாகவும், தேவலோகத்தில் வசிப்பதாகவும் கருத்துக்கள் உள்ளன. காமதேனு அனைத்து பசுக்களுக்கும் தாயாகவும், மந்திர சக்தி கொண்டதாகவும், இனிப்பான பாலை சுரப்பதாகவும் வர்ணிக்கப்படுகின்றன. [1]

காமதேனு அளவில்லா பாலைச் சரப்பது போலவே அன்னபூரணி தேவி, அளவில்லா அன்னம் வழங்கும் சக்தியுடைய கடவுள் என்பதால் தேவியின் வாகனமாக காமதேனு உள்ளது.[1]


வாகன அமைப்பு[தொகு]

காமதேனு உடல் ஒரு பசுவினுடையதாகவும், முகம் இரு கொம்புகளைக் கொண்ட ஒரு பெண்ணினுடையதாகவும் உள்ளது. காமதேனுவின் வால் மயில் தோகையைப் போல் அமைந்துள்ளது.[1]

கோயில்களில் உலா நாட்கள்[தொகு]

  • கோயம்புத்தூர் நகரின் காவல் தெய்வமாக கோனியம்மன் கருதப்படுகிறது. காமதேனு வாகனத்தில் கோனியம்மன் வீதியுலா தேர்திருவிழாவின் போது நடைபெறுகிறது. கோவிலில் இருந்து இசை வாத்தியங்கள் முழங்க வாகனம் புறப்பட்டு, பெரிய கடைவீதி, வைசியாள் வீதி, ராஜவீதி, தேர்நிலைத்திடல் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைகிறது.[2]

இவற்றையும் காண்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hindu Gods Vaganas drawings
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 புத்தகம்:தமிழகக் கோயில் வாகனங்கள். ஆசிரியர்:சக்கரவர்த்தி, பிரதீப். பக்கம் 21
  2. "காமதேனு வாகனத்தில் கோனியம்மன் வீதி உலா". Dinamalar.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காமதேனு_வாகனம்&oldid=3711867" இலிருந்து மீள்விக்கப்பட்டது