காப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காப் (Khap), தமிழ்நாட்டின் ஊர் பஞ்சாயத்து போன்ற அமைப்பாகும். காப் பஞ்சாயத்துக்கள் வட இந்தியாவின் அரியானா, இராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் பரலவாகக் காணப்படுகிறது. [1][2] சாதிய மூத்தோர் குழுவினர், இந்த காப் பஞ்சாயத்தில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களிடையே நிலவும் பிணக்குகளுக்கு தீர்வு சொல்வர்.[3][4]

காப் பஞ்சாயத்தார்கள் எந்தவொரு அரசியல் கட்சியை சாராதவர்களாக இருப்பர்.[5]மேலும் கிராம ஊராட்சி போன்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பங்கேற்கமாட்டார்கள். காப் பஞ்சாயத்துக்கு அரசு அங்கீகாரம் இல்லாது இருப்பினும், கிராம சாதிய சமூகத்தில் எழும் பிரச்சனைகளை தீர்க்க முக்கிய பங்காற்றுகிறது.[6]

அரியானாவில் ஜாட் இன மக்களிடையே தகியா காப் பெரும் செல்வாக்கு பெற்றது.[7][8][9][10]

வரலாறு[தொகு]

அரியானாவில் சர்வகாப் பஞ்சாயத்து கிபி 664ல் நிறுவப்பட்டது.[11] There is also a native belief that claims that Harsha systematized the sarv–khap panchayat in the 7th century at Prayag (modern Allahabad) during his quinquennial assemblage.[12]

வட இந்தியாவின் அரியானா, இராஜஸ்தான், மேற்கு உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் காப் (ஊர் பஞ்சாயத்துக்கள்) 14 அல்லது 15ம் நூற்றாண்டுகளிலிருந்தே இந்து சமயத்தின் சாதிய சமூகத்தில் காணப்பட்டது.[13]கால்நடை மேய்ப்பவர்களாக திரிந்த, ஜாட் இன மக்கள் வேளாண்மை சமூக மக்களாக மாறிய பின்னர் இந்த காப் ஊர் பஞ்சாயத்து முறை தோன்றியிருக்கலாம் எனக்கருதப்படுகிறது. [13]

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் காப் பஞ்சாயத்து உறுப்பினர்களை கிராம நிர்வாகத்திற்கு பயன்படுத்திக் கொண்டனர்.[14]

அமைப்பு[தொகு]

ஒரு காப் (தமிழ்நாட்டில் 18 பட்டி பஞ்சாயத்து என்பர்) பஞ்சாயத்து என்பது 84 கிராமங்களைக் கொண்ட ஒரு அலகு ஆகும். ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஒரு உறுப்பினர் வீதம் 84 பஞ்சாயத்து உறுப்பினர்கள் காப் பஞ்சாயத்திற்கு தேர்வு செய்யப்படுவர். (கிராம நிர்வாகத்தை மேற்பார்வை செய்ய கிராம ஊராட்சி தனியாகச் செயல்படும்). ஏழு கிராமங்கள் கொண்டது ஒரு தம்பா எனப்படும். 12 தம்பாக்கள் கொண்டது 84 கிராமங்கள் கொண்ட ஒரு காப் ஆகும். இருப்பினும் 12 மற்றும் 24 கிராமங்கள் கொண்ட ஒரு காப்-களும் உள்ளது.

அனைத்து காப் பஞ்சாயத்து (Sarv Khap or All Khap) எனும் அலகு அப்பிரதேசத்தில் உள்ள அனைத்து காப்களின் கூட்டமைப்பாகும். அனைத்து காப் பஞ்சாயத்து பிரதிநிதியாக ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஒருவரை தேர்வு செய்து அனுப்பலாம். அனைத்து காப் பஞ்சாயத்து என்பது அரசியல் கலந்த மற்றும் அனைத்து சாதி மக்களுக்கானது ஆகும்.

காப் பஞ்சாயத்து உறுப்பினர்களாக ஆண்கள் மட்டும் தேர்வு செய்யப்படுகின்றனர். அரியானாவில் பெண்களை காப் பஞ்சாயத்து கூட்டத்தில் அனுமதிக்கப்படுவதில்லை, ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆண் உறவினரை அனுமதிக்கின்றனர். [15]

அரியானாவில் ஜாட் சர்வ காப் பஞ்சாயத்து மிகவும் பெரியதாகும். இப்பஞ்சாயத்தில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை [16]

சமூகப் பிரச்சனைகளுக்கான தீர்வுகள்[தொகு]

காப் பஞ்சாயத்து சமூக மக்களிடையே எழும் சமூகப் பிரச்சனைகளாக கருக்கலைப்பு, மது குடித்துவிட்டு துன்புறுத்தல், வரதட்சனை மற்றும் கல்வி வளர்ச்சியில்[17], குறிப்பாக பெண் கல்வியில் திர்வு சொல்கிறது.[18]

அக்டோபர் 2012ல் அரியானாவில் தடைசெய்யப்பட்ட நூடுல்ஸ் உணவு சாப்பிட்டமைக்காக காப் பஞ்சாயத்து தலைவர் மீது குற்றம்சாட்டப்பட்டார். காப் பஞ்சாயத்தில் கற்பழிப்பு புகார்களை குறைக்கள் பெண்களின் திருமண வயது 18 இருந்து 16ஆக குறைக்க முடிவு செய்தது.[19][20]

தற்போது காப் பஞ்சாயத்துகள் திருமணங்கள் குறித்து முடிவு செய்யும் முறைக்கு பெயர்பெற்றது.[14]ஒரே கிராமத்தினர் திருமணம் செய்து கொள்வதையும், ஒரே கோத்திரத்தவர்கள் திருமணம் செய்து கொள்வதையும், மாற்று சாதியினரை திருமணம் செய்து கொள்வதையும் காப் பஞ்சாயத்து ஏற்பதில்லை.[6]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hindustan Times
  2. क्या है खाप पंचायत, क्यों है उसका दबदबा?, Atul Sagar, BBC 5 August 2009
  3. Saini, Manveer (21 April 2014). "Haryana's biggest khap panchayat scripts history, allows inter-caste marriages". The Times of India. http://timesofindia.indiatimes.com/india/Haryanas-biggest-khap-panchayat-scripts-history-allows-inter-caste-marriages/articleshow/34016585.cms. 
  4. Pradhan, M. C. (18 December 1965). "The Jats of Northern India Their Traditional Political System – II". Economic and Political Weekly. http://www.epw.in/system/files/pdf/1965_17/51/the_jats_of_northern_indiatheir_traditional_political_systemii.pdf. 
  5. खाप पंचायतों का हृदय परिवर्तन! अंजलि सिन्हा, Sahara Samay, 26 Apr 2014 samaylive.com.
  6. 6.0 6.1 Kaur, Ravinder (5 June 2010). Khap panchayats, sex ratio and female agency | Ravinder Kaur. Academia.edu. https://www.academia.edu/671328. பார்த்த நாள்: 31 March 2013. 
  7. Deswal, Deepender (7 March 2011). "Haryana's Dahiya khap, a body representing people of Jat community in Sonipat district, is organising a meeting to mark centenary celebrations in Sisana village on Monday". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 5 June 2021.
  8. "चौटाला परिवार को जोड़ने में दो खेमों में बटी दहिया खाप". Dainik Bhaskar (in இந்தி). 4 September 2019. பார்க்கப்பட்ட நாள் 26 November 2019.
  9. VIJENDER KUMAR (Oct 9, 2022). "Rival Faction Of Khaps Hold Mahapanchayat In Jind | Chandigarh News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-12.
  10. . https://www.bhaskar.com/amp/news/haryana-news-dahiya-khap-distributed-ration-in-40-villages-075504-6981062.html. 
  11. "हरियाणा सर्वखाप पंचायत". Jat Nayak (in இந்தி). 16 March 2019. பார்க்கப்பட்ட நாள் 26 November 2019.
  12. Pradhan, M. C. (11 December 1965). "The Jats of Northern India: Their Traditional Political System". Economic and Political Weekly. https://www.epw.in/system/files/pdf/1965_17/50/the_jats_of_northern_indiatheir_traditional_political_system.pdf. பார்த்த நாள்: 1 August 2020. "The sarv–khap Panchayat, according to local belief, was organized in 7th century by emperor Harsha in his lust [sic] quinquennial assembly at Prayag (modern Allahabad.). But from the written historical records it is evident that the various khaps of Meerut Division were organized into the sarvkhap Panchayat as early as 13th century.". 
  13. 13.0 13.1 Thakur, Ratika; Sinha, A. K.; Pathak, R.K. (2015). "Khap Panchayats in Transition with Contemporary Times: An Anthropological Evaluation." Panjab University.
  14. 14.0 14.1 Kumar, Ajay (28 January 2012). "Khap Panchayats: A Socio-Historical Overview". Economic and Political Weekly 47 (4): 59–64. 
  15. Chowdhry, Prem (2004). "Caste panchayats and the policing of marriage in Haryana: Enforcing kinship and territorial exogamy". Contributions to Indian Sociology 38 (1–2): 1–42. doi:10.1177/006996670403800102. https://journals.sagepub.com/doi/10.1177/006996670403800102. 
  16. "In rural Haryana women blamed for rape where men make the rules." The New York Times. 12 October 2012.
  17. Bajwa, Harpreet (16 August 2015). "Khap Panchayats Root for Educated Leaders". New Indian Express. http://www.newindianexpress.com/thesundaystandard/Khap-Panchayats-Root-for-Educated-Leaders/2015/08/16/article2976237.ece. 
  18. Siwach, Sukhbir (13 June 2014). "Haryana khaps launch campaign for girls' education". http://timesofindia.indiatimes.com/india/Haryana-khaps-launch-campaign-for-girls-education/articleshow/36459145.cms. 
  19. Saini, Manveer (16 October 2012). "Haryana khap blames consumption of chowmein for rapes". The Times of India. http://timesofindia.indiatimes.com/india/Haryana-khap-blames-consumption-of-chowmein-for-rapes/articleshow/16829882.cms. 
  20. "Khap duo: Marry at 16 to check rape". The Telegraph (Calcutta). 8 October 2012 இம் மூலத்தில் இருந்து 18 September 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160918161328/http://www.telegraphindia.com/1121008/jsp/nation/story_16065635.jsp#.V9djldFVK1E. 

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காப்&oldid=3744115" இலிருந்து மீள்விக்கப்பட்டது