உள்ளடக்கத்துக்குச் செல்

கான்சுடன்சுடீன் சியால்க்கோவுசுகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கான்சுடன்சுடீன் சியால்க்கோவுசுகி
பிறப்பு17 செப்டம்பர் [யூ.நா. 5 செப்டம்பர்] 1857
இசெவசுகோயெ, உருசியப் பேரரசு
இறப்பு19 செப்டம்பர் 1935(1935-09-19) (அகவை 78)
கலுகா, உருசியா, சோவியத் ஒன்றியம்
துறைவிண்வெளியியல் கோட்பாடுகள்
அறியப்படுவதுசியால்க்கோவுசுகி ஏவூர்திச் சமன்பாடு

கான்சுடன்சுடீன் எடுவர்டொவிச் சியால்க்கோவுசுகி (Konstantin Eduardovich Tsiolkovsky, உருசியம்: Константи́н Эдуа́рдович Циолко́вский, பஒஅ[kənstɐnʲˈtʲin ɪdʊˈardəvʲɪtɕ tsɨɐlˈkofskʲɪj]( கேட்க); போலிய: Konstanty Ciołkowski; 17 செப்டம்பர் [யூ.நா. 5 செப்டம்பர்] 1857  – 19 செப்டம்பர் 1935) உருசிய/ சோவியத்து ஏவூர்தி அறிவியலாளரும் விண்வெளியியல் கோட்பாடுகளுக்கான முன்னோடியுமாவார். இவரும் இவரைப் பின்தொடர்ந்த செருமானிய எர்மன் ஓபெர்த்து, அமெரிக்க இராபர்ட் காடர்ட் ஆகியோரும் ஏவூர்தி மற்றும் விண்வெளியியல் துறைகளை நிறுவியவர்களாக் கருதப்படுகின்றனர்.[1] இவரது ஆக்கங்கள் பிந்நாட்களில் உருசியாவின் முன்னணி ஏவூர்தி பொறியியலாளர்களாக புகழ்பெற்ற செர்கி கோரொலேவ், வாலென்டன் குளுசுக்கோ போன்றோருக்கு அகத்தூண்டலாக அமைந்தது; சோவியத் விண்வெளித் திட்டங்களின் வெற்றிக்கு வழிகோலியது.

சியால்க்கோவுசுகி தமது பெரும்பான்மையான வாழ்நாளை மாசுக்கோவின் தென்மேற்கில் 200 km (120 mi) தொலைவிலிருந்த குளுகா நகரின் புறத்தே மரவீடொன்றில் வசித்து வந்தார்.

மேற்சான்றுகள்

[தொகு]