காந்தி கண்ணதாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காந்தி கண்ணதாசன் கவிஞர் கண்ணதாசனின் மகனும், கண்ணதாசன் பதிப்பகத்தின் நிறுவனரும் ஆவார்.

கண்ணதாசன் பதிப்பகம்[தொகு]

இவர் 1976இல் கண்ணதாசன் பதிப்பகத்தினைத் தொடங்கினார். ஓசோவின் நூல்கள் மீது கொண்ட மதிப்பினால் அவரின் நூல்களை முறையாகத் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டார். 1994இல் கண்ணதாசன் பதிப்பகத்தினை கணினிமயமாக மாற்றினார்.[1]

நாட்டுடைமை எதிர்ப்பு[தொகு]

பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, மு. இராகவையங்கார், பம்மல் சம்பந்தனார், டாக்டர் மு. வரதராசனார், கவியரசு கண்ணதாசன் உள்ளிட்ட 28 தமிழ்ச் சான்றோர்களின் நூல்களை நாட்டுடைமையாக்க தமிழ் வளர்ச்சி துறை அறிவிப்பு வெளியிட்ட பொழுது, கண்ணதாசன் குடும்பத்தினரிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்தது குறித்து காந்தி கண்ணதாசன் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்காக மு. கருணாநிதி காந்தி கண்ணதாசனுக்கு கடிதம் எழுதினார்.[2] காந்தி கண்ணதாசனின் எதிர்ப்பின் காரணமாக தமிழக அரசு கண்ணதாசனின் நூல்களை நாட்டுடைமை ஆக்கவில்லை.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://andhimazhai.com/news/view/seo-title-2839.html வெற்றியைக் கொண்டு வந்த மூன்று விஷயங்கள் - காந்தி கண்ணதாசன் நேர்காணல்
  2. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?PVN=3748[தொடர்பிழந்த இணைப்பு] புத்தகங்களை நாட்டுடமையாக்க எதிர்ப்பதா? கண்ணதாசன் மகனுக்கு கருணாநிதி கடிதம் - நக்கீரன்

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தி_கண்ணதாசன்&oldid=3239434" இருந்து மீள்விக்கப்பட்டது