உள்ளடக்கத்துக்குச் செல்

காட்மோசெலைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்மோசலைட்டு
Cadmoselite
உருசியக் கூட்டமைப்பின் துவா குடியரசு துரான் மாவட்டத்தில் கிடைத்த , காட்மோசெலைட் கனிமம்
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுCdSe
இனங்காணல்
மோலார் நிறை191.37
நிறம்கருப்பு முதல் வெளிர் சாம்பல்
மிளிர்வுவிடாபிடியான – பிசின் தன்மை
கீற்றுவண்ணம்கருப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளி கசியும், ஒளிபுகாது
ஒப்படர்த்தி5.47

காட்மோசெலைட்டு (Cadmoselite) என்பது CdSe என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். காட்மியம் தனிமத்தின் செலீனைடு கனிமமான இது அறுங்கோண வடிவத்தில் படிகமாகிறது. ஒளிபுகா படிகங்களாக கருப்பு நிறம் முதல் வெளிர் சாம்பல் நிறம் வரையிலான நிறத்துடன் படிகங்களாகவும் மணிகளாகவும் காட்மோசெலைட்டு கனிமம் தோன்றுகிறது. [1][2] 1957 ஆம் ஆண்டு உருசிய கூட்டமைப்பைச் சேர்ந்த துவா குடியரசில் முதன் முதலாக காட்மோசெலைட்டு கனிமம் கண்டறியப்பட்டது. வெப்ப அழுத்த அதிகரிப்பின் காரணமாக புவியோட்டில் புதையுண்டு மணற்கற்களுக்கு இடையில் மணிகளாக கேட்மோசெலைட்டு கனிமம் இயற்கையில் உருவாகிறது. [1][2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்மோசெலைட்டு&oldid=4092029" இலிருந்து மீள்விக்கப்பட்டது