காட்டு பையன் சார் இந்த காளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காட்டு பையன் சார் இந்த காளி
இயக்கம்யுரேகா
கதையுரேகா
திரைக்கதையுரேகா
நடிப்புஜய்வந்த்
இரா அகர்வால்
ஆடுகளம் நரேன்
கலையகம்வொயிட் ஹவுஸ் சினிமாஸ்
வெளியீடுஆகத்து 3, 2018 (2018-08-03)
ஓட்டம்122 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காட்டு பையன் சார் இந்த காளி (Kattu Paya Sir Intha Kaali) 2018இல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். முதலில் இப்படத்திற்கு கெட்ட பையன் சார் இந்த காளி என்று பெயரிடப்பட்டது. இப்படத்தை எழுதி இயக்கியவர் யுரேகா.[1] இதில் அறிமுக நாயகனாக ஜெய்வந்த் மற்றும் ராஜஸ்த்தானைச் சேர்ந்த நடிகை இரா அகர்வால் என்பவர் நாயகியாக அறிமுகமானார். மற்றும் ஆடுகளம் நரேன், மூணார் ரமேஷ் ஆகியோர் துணைப் பாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் 2018 ஆகஸ்ட் அன்று வெளிவந்தது. பொதுவாக ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை.[2][3]

கதைச்சுருக்கம்[தொகு]

வட இந்திய மக்கள் தமிழ்நாட்டிற்கு வேலை நிமித்தமாக புலம் பெயர்ந்து வருவதும், எவ்வாறு குறைந்த ஊதியத்திற்கு இங்கு வேலைக்கு அமர்த்தப் படுகிறார்கள் என்பதும், அவர்கள் அன்றாட வாழ்க்கைக்காக இங்குள்ள தமிழக மக்களிடம் கடன் பெறுவதும், அக்கடன்ச்சுமை எவ்வாறு அவர்களை கடல் சுறா போல விழுங்குகிறது என்பதைப் பற்றியும் படத்தின் கதை கூறுகிறது.[4]

நடிப்பு[தொகு]

ஜெய்வந்த்
இரா அகர்வால் - மதுரையாக
ஆடுகளம் நரேன்
மூணார் ரமேஷ்
அபிஷேக்
மாரிமுத்து

தயாரிப்பு[தொகு]

இந்தப்படத்தின் தயரிப்பாளர் யுரேகாவே இதனை இயக்கியுள்ளார். ஏப்ரல் 2017இல் தொடங்கப்பட்ட இந்தப் படம் முதலில் "கெட்ட பையன் சார் இந்த காளி" என்று பெயரிடப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் நடித்து 1978இல் வெளிவந்த முள்ளும் மலரும் என்ற தமிழ்த்திரைப்படத்தில் அவர் பேசிய பிரபல வசனமாகும். ஆனால் பின்னர், 2017ன் தொடக்கத்தில் இன்னொரு படத் தயாரிப்பு நிறுவனம் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பேசிய இதே வசனத்தைக் கொண்டு "கெட்ட பையன் சார் இவன்" என்ற பெயரில் தன் படத்திற்கு பெயரிட்டது.[5] இந்த பெயர் குழப்பத்தின் காரணமாகவே இப்படத்திற்கு "காட்டு பையன் சார் இந்த காளி" எனப் பெயர் மாற்றப்பட்டது..[5]

மதுரை சம்பவம்" (2009) என்ற திரைப்படத்திற்கு பின்னர் திரைப்பட இயக்குனர் யுரேகா இயக்கிய நான்காவது முயற்சியாகும் , '"தொப்பி" (2015) மற்றும் "சிவப்பு எனக்கு பிடிக்கும்" (2017). ஆகியவை இவரின் முந்தையப் படங்களாகும். இதில் அறிமுக நாயகனாக ஜெய்வந்த் மற்ரும் ராஜஸ்த்தானைச் சேர்ந்த நடிகை இரா அகர்வால் என்பவர் நாயகியாக அறிமுகமானார். "தாயம்" படத்திற்குப் பின்னர் நாயகிக்கு இது இரண்டாவது படமாகும்..[6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kattu Paya Sir Intha Kaali Movie: Showtimes, Review, Trailer, Posters, News & Videos | eTimes". m.timesofindia.com (in ஆங்கிலம்). 31 July 2018 அன்று பார்க்கப்பட்டது.
  2. BookMyShow. "Kattu Paya Sir Intha Kaali Movie (2018) | Reviews, Cast & Release Date in Utraula - BookMyShow". BookMyShow (in ஆங்கிலம்). 31 July 2018 அன்று பார்க்கப்பட்டது.
  3. Kattu Paya Sir Intha Kaali Movie Review {1.5/5}: Critic Review of Kattu Paya Sir Intha Kaali by Times of India, 3 August 2018 அன்று பார்க்கப்பட்டது
  4. "‘Kaattu Paiya Sir Indha Kaali’ focuses on loan sharks" (in en). Gulf News. https://m.gulfnews.com/life-style/celebrity/desi-news/south-india/kaattu-paiya-sir-indha-kaali-focuses-on-loan-sharks-1.2259569. 
  5. 5.0 5.1 "படமாகும் அடுத்த ரஜினி வசனம் "கெட்ட பையன் சார் இவன்" டைரக்டர் யார் தெரியுமா?" (in ta). tamil.filmibeat.com. 2017-02-25. https://tamil.filmibeat.com/news/ketta-paiyan-sir-ivan-044943.html. 
  6. "‘காட்டுப் பய சார் இந்த காளி’ படத்தில் அறிமுகமான ராஜஸ்தான் நடிகை! - Samayam Tamil" (in ta). samayam Tamil. 2018-02-22. https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/iraa-agarwal-to-make-her-tamil-debut/articleshow/63034683.cms. 
  7. "Beauty queen set to wow celluloid" (in en). Deccan Chronicle. 2017-04-04. https://www.deccanchronicle.com/entertainment/kollywood/040417/beauty-queen-set-to-wow-celluloid.html.