காட்டுபாவா பள்ளிவாசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காட்டுபாவா பள்ளிவாசல் என்பது தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கியமான இசுலாமிய பள்ளிவாசல் ஆகும்.[1] இதனை காட்டுபாவா தர்கா எனவும் அழைக்கின்றனர்.‌

இங்கு பாவா பக்ருதீன் அவ்லியா என்பவரின் சமாதி உள்ளது. இவரை காட்டுபாவா அழைத்துள்ளனர்.[2]

காட்டுபாவா பள்ளிவாசல் 17-ஆம் நூற்றாண்டில் ஆற்காட்டு நவாப்பால் கட்டப்பட்டது என்கின்றனர். இங்கு நடத்தப்படும் கந்தூரி விழா மிகவும் புகழ்பெற்றதாகும்.

போர்வை பெட்டி[தொகு]

சந்தனக்கூடு விழாவின் போது பள்ளிவாசலில் இருந்து போர்வை பெட்டி நல்லூர் கிராமத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கு வாழும் இந்துக்கள் போர்வை பெட்டிக்கு வரவேற்பு அளித்து சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர். போர்வை பெட்டியை கொண்டு வரும் இசுலாமியர்களுக்கு விருந்து வைக்கின்றனர். பின்னர் போர்வையை தர்காவிற்கு எடுத்து வந்து பாவா மீது போர்வையை போர்த்துகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காட்டுபாவா பள்ளிவாசல் சந்தனக்கூடு - Dinamalar Tamil News". Dinamalar. 4 ஜன., 2018. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "காட்டுபாவா பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா". Dinamani.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டுபாவா_பள்ளிவாசல்&oldid=3928761" இலிருந்து மீள்விக்கப்பட்டது