உள்ளடக்கத்துக்குச் செல்

காடியா லோகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்வாரின் காடியா லோகர் இனத்தைச் சேர்ந்த நாடோடிப் பெண், ராட்லாம் மாவட்டத்தில்

காடியா லோகர் (Gadia Lohar) என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நாடோடி இனம். இவர்கள் மத்தியப்பிரதேசத்தின் மால்வா பகுதிகளிலும் காணப்படுகின்றர். இவர்கள் இரும்பு சம்பந்தமான கொல்லர் வேலைகள் செய்பவர்கள். எனவே இவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாட்டுவண்டியில் இடம்பெயர்வர். (இந்தி மொழியில் வண்டி என்பதற்கு காடி என்று பொருள்). இவர்கள் ஈரான் மற்றும் பாகிஸ்தானின் லோகர் இனத்தோடு தொடர்புடையவர்கள் அல்ல.

இவர்களின் முன்னோர்கள் மத்தியப் பிரதேசத்தின் மேவார் பகுதியை ஆண்ட மகாராணா பிரதாப்பிடம் கொல்லராக இருந்தவர்கள். மேவார் அரசு முகலாயர்களிடம் வீழ்ந்தபோது இவர்களின் இடங்கள் முகலாய அரசால் பறிக்கப்பட்டது. இவர்களின் மாட்டுவண்டிதான் இவர்களின் வீடு . பல்வேறு இயற்கைச் சூழல்களில் இவர்கள் சிரமமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வாழ்க்கையைப் பற்றி 2005-ல் இயக்குநர் மீனாக்ஷி வினய் ராய் காடியா லோகர் : கேள்விக்குறியான ஒரு வாழ்க்கையும் பிழைப்பும்? (Gadia Lohar: A Life and Livelihood in Question?) என்ற 25 நிமிட ஆவணப்படத்தைத் திரையிட்டார்.

தொடர்புடைய இணைப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காடியா_லோகர்&oldid=4161240" இலிருந்து மீள்விக்கப்பட்டது