காசுமீரி சிவப்பு மிளகாய்
காசுமீரி சிவப்பு மிளகாய் | |
---|---|
இனம் | காப்சிகம் அன்னுவம் |
பயிரிடும்வகைகள் | Kashmiri Mirch, Kashmiri Laal Mirch |
வார்ப்புரு:Infobox pepper |
காசுமீர சிவப்பு மிளகாய் (Kashmiri red chilli) அல்லது காசுமீரி லால் மிர்ச் என்பது உணவுக்கு அடர் சிவப்பு நிறத்தைக் கொடுக்கும், வண்ணம் மற்றும் சுவை சேர்க்கும் திறன் கொண்ட மிளகாய் வகையாகும். மேலும் உணவை மிகவும் காரமானதாக மாற்ற அனுமதிக்காது.[1] காசுமிரி சிவப்பு மிளகாய் உற்பத்தியிலும் பயன்பாட்டிலும் இந்தியா மிகப்பெரிய சந்தையினைக் கொண்டுள்ளது.[2] எம்டிஎச், எவரெசுட் மசாலா, சக்தி மசாலா மற்றும் பாட்சா மசாலா உள்ளிட்ட பல நிறுவனங்கள் தூள் வடிவில் இம்மிளகாய் வணிகத்தில் ஈடுபட்டுள்ளன.[3] இந்தியாவில் உள்ள பெரும்பாலான உணவகத் தொழிலில் காசுமீர மிளகாய் அல்லது மிளாகாய் தூள் பயன்படுத்துவதாக விர் சங்வி தெரிவிக்கின்றார்.[4] சமையல்காரர்கள் கோன் பெரி-பெரி மசாலா உணவுகளுக்கு மாற்றாக காசுமீர மிளகாயைப் பயன்படுத்துகின்றனர்.[4]
காசுமீர மிளகாய்க்கு அதிக தேவை இருப்பதால், பைதாகி மிளகாய் போன்ற மாற்றீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.[3] காசுமீர மிளகாயின் உள்ளூர் வகையை ஆதரிப்பதற்கும், உற்பத்தியை அதிகரிப்பதற்கும் சம்மு காசுமீரில் அரசாங்க முன்முயற்சிகளும் ஊக்குவிப்புகளும் செயலில் உள்ளன.[5]
சிறப்பியல்புகள்
[தொகு]இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தின் கூற்றுப்படி, இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ், காசுமீர மிளகாய் முக்கியமாக ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் விளைகிறது. ஆனால் தற்பொழுது கோவா போன்ற இடங்களிலும் பயிரிடப்படுகிறது.[4][6] இவை குளிர்காலத்தில் அறுவடை செய்யப்படுகின்றன. அமெரிக்கன் நறுமண வணிக சங்கம் இதன் வண்ண மதிப்பினை 54.10 என மதிப்பிட்டுள்ளது. இந்த மதிப்பு மிளகாயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் நிறத்தின் அளவைக் கண்டறிய உதவுகிறது.[6] கேப்சைசின் மதிப்பு 0.325% ஆகும்.[6] இவை மென்மையானவை, சுகோவில் அளவுகோலில் 1000 - 2000 எசுஎச்யு வரை இருக்கும்.[7] காசுமீர சிவப்பு மிளகாயில் பல்வேறு குணங்கள் உள்ளன. 1999-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, கேப்சைசின் மதிப்பு 0.126% எனக் கண்டறியப்பட்டது.[8]
இந்தியாவின் நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் எவரெஸ்ட் காஷ்மீரி லால் (எவரெஸ்ட் மசாலாப் பொருட்கள்) சுகோவில் அளவுகோலில் 48,000-ல் வைக்கிறது. அதே நேரத்தில் கோல்டன் ஹார்வெஸ்ட் காஷ்மீரி மிர்ச் பவுடர் (கோல்டன் ஹார்வெஸ்ட்) 60,000-ஐ சுகோவில் அளவுகோலில் கொண்டுள்ளது.[9] இந்த சுகோவில் அளவுகோல் நிலை சந்தையில் உள்ள மற்ற வணிகத் தயாரிப்புகளைப் போலவே உள்ளது.[9] இதனுடன் கலப்படம் செய்யப்படும் பொருட்களில் செங்கல் தூளும் ஒன்றாகும்.[10]
பயன்பாடு
[தொகு]காசுமீர மிளகாய் தந்தூரி சிக்கன் போன்ற பல்வேறு அசைவ உணவுகளிலும், டைகர் இறால் போன்ற சிற்றுண்டிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இது ஊறுகாய் மற்றும் சட்னி தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. இது பாவ் பாச்சி, மிசல் பாவ் போன்ற உணவுகளில் நிறத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Kapoor, Sanjeev. "Kashmiri Red Chillies". Sanjeev Kapoor. பார்க்கப்பட்ட நாள் 2021-07-26.
- ↑ "Kashmiri Mirch". NDTV Food. பார்க்கப்பட்ட நாள் 2021-07-26.
- ↑ 3.0 3.1 Christo, Margaret (2015-02-24). "What is Kashmiri Chilli Powder?". Margaret's Home (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-26.
- ↑ 4.0 4.1 4.2 Sanghvi, Vir (2021-07-11). "Rude Food by Vir Sanghvi: Red hot chilli peppers". Hindustan Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-26.
- ↑ "Govt committed to reviving local variety of Kashmiri Lal Mirchi: Director Agriculture". Kashmir Reader. 2021-07-16. பார்க்கப்பட்ட நாள் 2021-07-26.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ 6.0 6.1 6.2 "Chilli". www.indianspices.com. Spices Board India, Ministry of Commerce and Industry, Government of India. பார்க்கப்பட்ட நாள் 2021-07-26.
- ↑ "What is Kashmiri Chilli? (Essential Ingredient in the South Asian Kitchen)". LinsFood | by Azlin Bloor (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2021-01-03. பார்க்கப்பட்ட நாள் 2021-07-26.
- ↑ Krishnamurthy, R; Malve, M K; Shinde, B M (August 1999). "Evaluation of Capsaicin Content in Red and Green Chillis". Journal of Scientific and Industrial Research 58: 629-630. http://nopr.niscair.res.in/bitstream/123456789/17859/1/JSIR%2058%288%29%20629-630.pdf.
- ↑ 9.0 9.1 How hot is Chilli Powder? Consumer Education and Research Centre. Environment Information System, Ministry of Environment, Forest and Climate Change, Government of India. Retrieved on 26 July 2021.
- ↑ Desai, Nilam; Patel, Dharmendra (January 2021). "Identification of Adulteration in Household Chilli Powder from Its Images using Logistic Regression Technique". Reliability: Theory & Applications 16 (RT&A, Special Issue No 1 (60)): 384-391. http://www.gnedenko.net/Journal/2021/SI_012021/RTA_SI_1_2021-38_384-391.pdf. "[...] to identify adulteration in Kashmiri chilli powder by its images. Here, we are considering adulteration as a brick powder mixed with chilli powder.".