உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய மசாலா வாரியம்
Spices Board of India
உருவாக்கம்1987
வகைஇந்திய அரசாங்க ஒழுங்குமுறை மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம்
தலைமையகம்கொச்சி, கேரளம், இந்தியா
தலைவர்
அமர்தீப் சிங் பாட்டியா, இ.ஆ.ப
செயலாளர்
கே. ஜி. ஜகதீசா, இ.ஆ.ப
தாய் அமைப்பு
இந்திய அரசு
வலைத்தளம்indianspices.com
கேரளாவின் ஏலக்காய் மலைகளில் ஏலக்காய் செடிகள்

இந்திய மசாலா வாரியம் (Spices Board of India) இந்திய அரசுக்கு சொந்தமான ஒரு நிறுவனமாகும். இந்திய அரசாங்கத்தின் ஒழுங்குமுறை மற்றும் இந்திய மசாலாப் பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனமாக மசாலா வாரியம் உள்ளது. இந்திய அரசாங்கத்தின் இணைச் செயலாளருக்குச் சமமான பதவியில் இவ்வாரியத்தின் தலைவர் தலைமை வகிக்கிறார். இந்த வாரியத்தின் தலைமையகம் கொச்சியில் உள்ளது.

வரலாறு

[தொகு]

1986 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மசாலா வாரியச் சட்டத்தின் கீழ் 1987 ஆம் ஆண்டு வாரியம் அமைக்கப்பட்டது. இச்சட்டத்தின் அட்டவணையில் காட்டப்பட்டுள்ள 52 மசாலாப் பொருட்களின் உற்பத்தி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு ஆகியவற்றுக்கு இவ்வாரியம் பொறுப்பு வகிக்கிறது.

நிர்வாகம்

[தொகு]

மசாலா வாரியத்தின் தலைமையகம் கொச்சியில் உள்ளது. தலைமையகத்திற்கு அருகில் மசாலா வாரியத்தின் ஒரு விற்பனை நிலையம் உள்ளது. நறுமணச்சுவை என்ற பொருள் கொண்ட தரக் குறியீட்டின் கீழ் மசாலாப் பொருட்கள் இங்கு விற்கப்படுகின்றன.

சேவைகள்

[தொகு]

தர ஆய்வகம்

[தொகு]

இதன் தலைமையகம் கொச்சியிலும், பிராந்திய ஆய்வகங்கள் மும்பை, சென்னை, தில்லி, தூத்துக்குடி, கண்ட்லா மற்றும் குண்டூரிலும் அமைந்துள்ளது. ஆய்வகங்கள் மூலம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மசாலப் பொருட்களக்கும் கட்டாயத் தர சோதனைகளை செய்கிறது.[1]

வாங்குபவர்களுக்கான தகவல் சேவைகள்

[தொகு]

இந்தியாவில் பயிரிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் மசாலாப் பொருட்களான ஏலக்காய் மற்றும் மிளகும் மற்ற பல மசாலா பொருட்கள் பற்றிய தகவல்களை இந்த வாரியமானது உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்குகிறது.[2] [3] மேலும் இந்த வாரியத்தின் கீழ் இயங்கும் மசாலா பூங்காவானது கேரளாவின் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட புட்டடி என்ற இடத்தில் இயங்கி வருகிறது.[4]

வாடிக்கையாளர் தகவல் பிரச்சாரங்கள்

[தொகு]

இந்திய நாட்டின் வளமான மசாலா பாரம்பரியத்தைப் பற்றி மக்களுக்கு கற்பிக்க. இந்த வாரியமானது நறுமண இரயில் என்ற இணையவழி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gantzer, Hugh; Gantzer, Colleen (2014). SpiceStory. Spices Board of India. ISBN 9789383098385.
  2. Spices Export Promotion Council Indian Spices கூகுள் புத்தகங்களில்
  3. "A political patch-up in Kerala prior to the Lok Sabha polls". The New Indian Express.
  4. Spices Park

வெளி இணைப்புகள்

[தொகு]