காசா விளையாட்டரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காசா விளையாட்டரங்கம்
KASA Stadium
முழுமையான பெயர்கர்பி ஆங்லாங் விளையாட்டுச் சங்க விளையாட்டரங்கம்
அமைவிடம்திபு, கர்பி ஆங்கலாங்கு மாவட்டம், அசாம், இந்தியா
ஆட்கூற்றுகள்25°50′48″N 93°26′22″E / 25.84653°N 93.4393168°E / 25.84653; 93.4393168
உரிமையாளர்கர்பி ஆங்லாங் விளையாட்டுச் சங்கம்
இருக்கை எண்ணிக்கை9,000
ஆடுகள அளவு105.0 மீ X 68.0 மீ
தரைப் பரப்புசெயற்கைப் புல் தரை
திறக்கப்பட்டது2018
குடியிருப்போர்
கர்பி ஆங்லாங் மார்னிங் இசுடார் கால்பந்து அணி

காசா விளையாட்டரங்கம் (KASA Stadium) இந்தியாவின் அசாம் மாநிலம் கர்பி ஆங்கலாங்கு மாவட்டத்தின் தலைமையகமான திபுவில் அமைந்துள்ளது. ஒரு பல்நோக்கு விளையாட்டரங்கமான இது கர்பி ஆங்லாங் விளையாட்டு சங்க விளையாட்டரங்கம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. முக்கியமாக கால்பந்து மற்றும் தடகள விளையாட்டுகளுக்கு அரங்கம் பயன்படுத்தப்படுகிறது. விளையாட்டரங்கில் 9000 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை காணமுடியும்.[1]தொடக்கப் போட்டியாக அசாம் மாநில பிரீமியர் லீக்கின் நடப்பு சாம்பியன் மற்றும் அரங்கத்தின் சொந்த அணியான கர்பி ஆங்லாங் மார்னிங் இசுடார் கால்பந்து சங்க அணிக்கும் வங்காள தேசத்தின் அசதுசாமான் கால்பந்து சங்க அணிக்கும் இடையே அறிமுக நட்பு கால்பந்து போட்டி இங்கு நடைபெற்றது.[2]

விளையாட்டரங்கம்[தொகு]

அசாம் மாநில பிரீமியர் லீக்கின் வெற்றியாளரான கர்பி ஆங்லாங் மார்னிங் இசுடார் கால்பந்து அணிக்கு இவ்விளையாட்டரங்கம் சொந்தமானதாகும். ஒவ்வொர் ஆண்டும் செம் தங்கக் கோப்பை கால்பந்து போட்டி இங்கு நடைபெறுகிறது. கர்பி ஆங்லாங் விளையாட்டுச் சங்கமும் மேற்கு கர்பி ஆங்லாங் விளையாட்டுச் சங்கமும் இணைந்து போட்டியை நடத்துகிறது. கர்பி ஆங்லாங் தன்னாட்சி மன்றம் விளையாட்டுச் சங்கங்களுடன் இணைந்து போட்டிக்கான ஆதரவை அளிக்கிறது. போட்டியின் 5 ஆவது பதிப்பை ஐதராபாத்து கால்பந்து சங்கத்தின் அணியை 4-2 என்ற கோல்கள் கணக்கில் தோற்கடித்து கர்பி ஆங்லாங் மார்னிங் இசுடார் கால்பந்து சங்க அணி வென்றது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Assam: KarbiAnglong stadium to host inaugural soccer match this Thursday". NE Now. பார்க்கப்பட்ட நாள் 27 April 2022.
  2. "Karbi Anglong Sports Association (KASA) Stadium Test Event held". The Sentinel. பார்க்கப்பட்ட நாள் 27 April 2022.
  3. "Karbi Anglong Morning Star FC completes hat-trick in CEM Gold Cup". Eastern Mirror Nagaland. பார்க்கப்பட்ட நாள் 27 April 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசா_விளையாட்டரங்கம்&oldid=3856640" இலிருந்து மீள்விக்கப்பட்டது