காகிதக்கூழ் புனைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1936ல் வெளியான ஒரு காகிதக்கூழ் இதழ்

காகிதக்கூழ் புனைவு (Pulp Fiction) என்பது ஒரு இலக்கியப் பாணி. 1896ல் தொடங்கி 1950கள் வரை வெளியான காகிதக்கூழ் இதழ்களில் வெளியான புனைவுக் கதைகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இந்த இதழ்கள் பொதுவாக 128 பக்கங்களுடன் 10 அங்குலம் நீளம், 7 அங்குலம் அகலம் உடையனவாக இருந்தன. மலிவான ஒழுங்கற்ற முனைகளையுடைய காகிதக் கூழ் பக்கங்களில் அச்சடிக்கப்பட்டிருந்தன. எனவே இவை “காகிதக்கூழ்” இதழ்கள் என்று அழைக்கப்பட்டன. 19ம் நூற்றாண்டில் பிரபலமாக இருந்த டைம் புதினங்கள், பென்னி டிரட்ஃபுல் புதினங்கள் போன்ற மலிவு விலைப் புனைவு நூல்களின் 20ம் நூற்றாண்டு இலக்கிய வாரிசாக இவை அமைந்தன. இலக்கிய உலகில் மதிக்கப்பட்ட பல எழுத்தாளர்களின் கதைகள் இந்த இதழ்களில் வெளியானாலும், பெரும்பாலும் இவற்றில் இச்சையைத் தூண்டும் புனைவுகளே இடம் பெற்றிருந்தன. இவற்றி அட்டைப்படங்கள் பரபரப்பைத் தூண்டும் விதத்தில் வரையப்பட்டிருந்தன. 20ம் நூற்றாண்டில் பிரபலமடைந்த அதி நாயக படக்கதைகள் காகிதக்கூழ் புனைவுகளின் வழித்தோன்றல்களாகக் கருதப்படுகின்றன. தமிழ் நாட்டில் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பரவலாகப் படிக்கப்பட்ட ”பாக்கெட் நாவல்”கள் (ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள்) தமிழில் காகிதக்கூழ் புனைவுகளாகக் கருதப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காகிதக்கூழ்_புனைவு&oldid=2062212" இருந்து மீள்விக்கப்பட்டது